குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சமய விழாவில் கலந்துகொண்ட முன்னாள் எம்எல்ஏவின் மனைவி நடமாடும் தங்க கடை போன்று வந்துள்ளது பிரச்சனைக்குள்ளாகியுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90
குஜராத் மாநிலம் போர்பந்தர் நகரில் சமய விழா நடைபெற்றது, இந்த விழாவில் முன்னாள் எம்எல்ஏ புகுரா என்பவரது மனைவியும், அவரது குடும்ப பெண்களும் அளவுக்கதிகமான நகைகளை அணிந்து வந்துள்ளனர்.

மேலும் ஆண்களும் ஆயுதங்களையும், துப்பாக்கி குண்டுகளையும் கொண்டு சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடும் கண்டனங்கள் எழவே முன்னாள் எம்எல்ஏ, புகுராவின் மனைவி, மகள் மற்றும் போர்பந்தர் பகுதியை சேர்ந்த தாதா பீமா துலா ஒதேராவின் மகன் லஷ்மண் மற்றும் அவரது மனைவி மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக புகுரா கூறுகையில், தனது குடும்ப உறுப்பினர்கள் நிகழ்ச்சியின் போது, புகைப்படத்திற்கு மட்டும் போஸ் கொடுத்தனர். இந்த துப்பாக்கிகளுக்கு முறையான உரிமம் வாங்கப்பட்டுள்ளது. அவர்கள் துப்பாக்கியால் சுடவில்லை.

எனது மனைவி, உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் போஸ் கொடுத்ததற்காக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version