16 வயதுடைய என்ற சந்தேகத்தில் 32 வயதுடைய திருமணமான நபரைக் கைது செய்த ஆராச்சிக்கட்டு பொலிஸார் நேற்று முன்தினம் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அந்நபரை தலா இருபது இலட்சம் ரூபா கொண்ட இருவரின் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.00 மணிக்கும் 10.00 மணிக்கும் இடையில் ஆராச்சிகட்டு பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் சிலாபம் நீதவானும், மாவட்ட நீதிபதியுமான மஞ்சுல ரத்நாயக்கா, கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
ஆராச்சிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு எச்சரிக்கையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவி தனது வீட்டில் தனிமையிலிருந்து படித்துக் கொண்டிருந்த போது குறித்த நபர் அம்மாணவியின் வீட்டினுள் பலவந்தமாக நுழைந்து மாணவியிடம் தவறான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதோடு மாணவியின் மார்பு பகுதியைத் தடவியுள்ளார்.
இந்த நிலையில், மாணவியின் கடும் எதிர்ப்பு மற்றும் கூக்குரலினால் அந்நபர் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும் மாணவியின் சகோதரன் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.