ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு ஈரானியர் கொரோனா வைரஸினால் உயிரிழப்பதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 50 ஈரானியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவ‍ேளை ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 149 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள்தாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகி 1,284 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version