பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து இளவரசா் ஹரியும் அவரது மனைவி மேகன் மார்க்கலும் நேற்று (31.03.2020) உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளனர்.
பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹரி, இளவரசி மேகன் மார்கல் தம்பதியினர் அண்மையில் அறிவித்தனர்.
இவர்களின் இந்த முடிவு சர்வதேச அளவில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இளவரசர் ஹரி, இளவரசி மேகன் ஆகியோரின் இந்த முடிவால் அரச குடும்பம் கவலையடைந்தது.
அதேவேளை, பிரிட்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இருந்து இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் நேற்று புதன்கிழமை அதிகாரபூர்வமாக விலகியுள்ளார்கள்.
இதனையடுத்து ஹரி-மேகன் தம்பதி இன்றிலிருந்து (01.03.2020) பக்கிங்ஹாம் அரண்மனை விவகாரங்களில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளார்கள்.
தற்போது இருவரும் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.