“வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்” என அமெரிக்க மக்களிடம் கூறியுள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் நாட்கள் “வலி மிகுந்தவையாக” இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Trump-1“இது வலி மிகுந்ததாக இருக்கும்… அடுத்த இரண்டு வாரங்கள் மிக மிக மாேசமாக இருக்கும்” என வைரஸ் தொற்று பரவலைக் கொள்ளை நோய் என்று விவரித்து பேசிய டிரம்ப் தெரிவித்தார்.

“வரும் கடினமான நாட்களுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும் தயாராக வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்” என வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version