இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஒரு நாளை இரண்டு முறை மத்திய அரசு சார்பில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இறந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை வெளியிடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1975 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,947 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5914 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 826 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version