‘அம்பன்’ (Amphan) சூறாவளி காரணமாக இந்தோனேஷியாவிற்கு அடித்துச் செல்லப்பட்ட 30 படகுகளும் மீண்டும் நாட்டிற்கு திரும்புவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த படகுகளில் 180 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளதாக கடற்றொழில் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீனவப் படகுகளுக்கு ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் கடற்படையின் படகொன்றை அந்த பகுதிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மீனவப் படகுகளுக்கு தேவையான எரிபொருளுடன் குடாவெல்ல துறைமுகத்தில் இருந்து மற்றுமொரு படகும் பயணிக்கவுள்ளது.

அம்பன் சூறாவளியால் கடலில் காற்றின் வேகம் அதிகரித்து, மீன்பிடிப் படகுககள் அடித்துச் செல்லப்பட்டன.

இதேவேளை, மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version