மக்கள் ரயிலில் பயணிக்கும் போது மொபைல், ஹெட்போன் அல்லது பர்ஸ் என எதையாவது தவறவிட்டுச் செல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சுவிட்சர்லாந்தில் ஒருவர் கிலோ கணக்கில் தங்கத்தைத் தவற விட்டு சென்றுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் ரயிலில் 3 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தைத் தவறவிட்டுச் சென்ற நபரைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
இந்திய மதிப்பில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் செயின்ட் கேலன் மற்றும் லூசெர்ன் நகரங்களுக்கு இடையேயான ரயிலில் கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கத்தின் உரிமையாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்குள் இது தங்களுடையதுதான் என்பதை லூசெர்னில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் நிரூபித்த பின்னர் தங்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் உரிமையாளரைக் கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், தற்போது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாராவது முன்வந்து இது தங்களுடைய தங்கம் என கூறினால் அதிகாரிகள் அதை எப்படி உறுதிப்படுத்துவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.