திருகோணமலையில் கன்னியா பிரதேசத்தில் உள்ள குப்பைகள் கொட்டும் தளத்தில் கொட்டப்படும் குப்பைகளை 42 யானைகள் உணவாக உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளதாக அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை நகரசபைக்கு உற்பட்ட பிரதேசங்களில் இருந்து நாளாந்தம் பதினான்கு டிரக்டர் குப்பைகளும்,பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து பண்ணிரென்டு தடவைகளும்,திருகோணமலை கடற்படை தளத்தில் இருந்து ஆறு தடவைகளும், பிரிமா மா ஆலை மற்றும் மிட்சிபிச்சி சிமெண்டு நிறுவனத்தின் குப்பைகளும் நாளாந்தம் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்டுகிறது.
இந்நிலையில், இவ்வாறு பிரிக்கப்படாத குப்பைகளை உணவாக உண்டு பழக்கப்பட்ட யானைகள் குப்பைகளோடு கலந்துள்ள பிளாஸ்டிக், ரப்பர், பொலித்தீன் போன்ற சமிபாடு அடையாத பொருட்களை உணவாக உற்கொள்வதை அன்றாடம் காணக்கூடியதாக இருப்பதாக அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
குப்பைகொட்டும் தளத்திற்கு யானைகளின் வரவை கட்டுப்படுத்துவதன் மூலம் யானைகளின் எண்ணிக்கையை திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்க செய்யலாம் தவறும்பட்சத்தில் ஒரு தேசிய இனத்தின் அழிவுக்கு திருகோணமலையில் வழிசமைத்துக்கொடுப்பவர்கள் நாமாக இருக்க்கூடும்.