நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை நண்பகல் 12 மணிவரை மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடி படகுகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக செல்லும் மீனவர்கள் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவேண்டும் என அத்திணைக்களம் கோரியுள்ளது.
அதற்கமைய, நாட்டை சூழவுள்ள ஆழமற்ற மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.