தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கை போலீஸ்காரரை நீதிமன்றக் காவலில் எடுத்த சிபிசிஐடியினர் தனுஷ்கோடியில் வைத்து விசாரணை நடத்தினர்.

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை அடுத்த கம்பிபாடு கடற்கரையில் செப்.5-ல் பைபர் படகு மூலம் இலங்கையிலிருந்து தப்பி வந்த வரை மண்டபம் மெரைன் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், சிங்களவரான அவர் இலங்கை மொனார்கலா மாவட்டம் சியம்பலன்டுவா பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் பண்டாரா (30) என்பதும் கொழும்பு குற்றத்;தடுப்பு பிரிவில் போலீஸ்காரராகப் பணியாற்றியதும் தெரிந்தது.

மெரைன் போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியிலுள்ள மரக் கடையிலிருந்து இலங்கை போலீசாரால் கைப்பற்றப்பட்ட 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் மர கடையின் உரிமையாளர் மற்றும் காவலர் பிரதீப் குமார் பண்டாராவின் சகோதரர் என இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், தன்னையும் கைது செய்துவிடுவார்கள் என்பதால் தமிழகத்துக்கு தப்பி வந்ததாக தெரிவித்தார்.

பிரதீப்குமார் பண்டாராவுக்கும்;, கோவையில் உயிரிழந்தஇலங்கை சிழலுக தாதா அங்கடலக்காவுக்கும் போதை பொருள் விற்பனையில் தொடர்பு உள்தாக கூறப்பட்டதால் இந்த வழக்கை தமிழக டிஜிபி கடந்த 7-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றினார்.

தொடர்ந்து செப்டம்பர் 17 அன்று பிரதீப் குமார் பண்டாராவை காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2-ல் சிபிசிஐடி போலீஸார் மனுத் தாக்கல் செய்து அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றனர்.

இந்நிலையில் கோவை மண்டல சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜீ தலைமையில் தனுஷ்கோடியை அடுத்த கம்பிபாடு கடற்கரையில் பிரதீப் குமார் பண்டாராவை அழைத்து வந்து போலீஸ் வாகனத்தை விட்டு இறக்காமல் கடந்த 5 ந்தேதி இரவு என்ன நடந்தது, பிரதீப்குமாரை முதலில் யார் பார்தது, பாக் ஜல சந்தி கடல் வழியாக போதைபொருட்கள் சட்ட விரோத அந்நிய ஊடுருவல் குறித்து அப்பகுதி மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

Share.
Leave A Reply

Exit mobile version