மெக்ஸிகோவில் டிக்டொ வீடியோவொன்று எடுக்கும்பொழுது தவறுதலாக துப்பாக்கி இயங்கியதால் அரிலின் (Areline) என்ற யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சிஹூவாஹூவா என்ற இடத்தைச் சேர்ந்த குறித்த யுவதி விநோதமான முறையில் டிக்டொக் வீடியோ எடுக்கும் பழக்கமுடையவர் .

இந் நிலையில் பணயக்கைதி போன்று டிக்டாக் எடுக்கவிரும்பிய அவர், அதற்காக தனது நண்பர்களுடன் நிஜ துப்பாக்கி மூலம் நடித்துக் கொண்டிருந்தார்.

இதன் போது குறித்த யுவதியின் தலைக்கு மேல் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை நண்பர் தவறுதலாக அழுத்தியதால் தலையில் தோட்டா பாய்ந்து நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version