இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபப் பெண், தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நீண்ட கால நோயால் பீடிக்கப்பட்ட இவருக்கு கொரோனா தொற்றுடன் நிமோனியா நிலைமை ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version