நாட்டில் இன்று கொரோனாவால் ஐவர் மரணம்.

நாட்டில் மினுவங்கொடை கொத்தணி முடிவை எட்டியுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்திருந்த நிலையில் இன்று நாட்டில் 468 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை போணியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,191 உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்கள்  5107 சிகிச்சைப்பெற்று வருவதுடன் கொரோனா தொற்று சந்தேகத்தில் 501 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

நாட்டில் இன்றையதினம் மேலும் 378  கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக  சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 11,031 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இது வரை முறையே 4333 மற்றும் 4,640 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் இன்று கொரோனாவால் ஐவர் மரணம்.

இந்நிலையில் இன்றையதினம் நாட்டில் கொரோனாவால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு 14 ஐ சேர்ந்த 83 வயது பெண் ஒருவரும், சிலாபத்தைச் சேர்ந்த 68 வயது ஆண் ஒருவரும், ரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண் ஒருவரும், கொழும்பு 13 ஐ சேர்ந்த 78 வயது மற்றும் 64 வயதுடைய ஆண்கள் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களுல் இருவர் வைத்தியசாiலயிலும் ஏனைய மூவரும் வீட்டிலும் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்,

  • கொழும்பு 14 ஐ சேர்ந்த 83 வயது பெண் ஒருவரும் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட இரத்தப்போக்கு  காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சிலாபத்தைச் சேர்ந்த 68  வயது ஆண் ஒருவரும் கொரோனா தொற்று காரணமாக முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட இரத்தப்போக்கு மற்றும் மூளைக்கு இரத்தம் கசிவு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண், நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்துள்ளார்.  இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கொழும்பு 13 ஐ சேர்ந்த 78 வயது ஆண் ஒருவரும் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கொழும்பு 13 ஐ சேர்ந்த 64 வயது ஆண் ஒருவரும் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆஸ்துமா நோயாளியான இவர் கொரோனா தொற்று  காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் 4000ஐ கடந்துள்ள  தொற்றாளர்கள்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இது வரை முறையே 4333 மற்றும் 4,640 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 4.00 மணிவரையான காலப்பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை 4333 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை,கொழும்பு மாவட்டத்தில் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்தமாக எண்ணிக்கை 4,640 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் 3,600 க்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவெளை, நேற்று வியாழக்கிழமை 10 மாவட்டங்களில் 349 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பிலேயே 271 என்ற அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பைத் தவிர கம்பஹாவில் 46, களுத்துறையில் 12, காலியில் 4, கேகாலையில் 10, பொலன்னறுவையில் 1 மற்றும் புத்தளம், இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவை தவிர பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 20 பேருக்கும் , ஏனையோரில் 4 பேருக்கும் வியாழனன்று தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

மாத்தளை – கலேவல பிரதேசத்தில் சிறுவன் உட்பட 9 பேருக்கு கொரோனா!

மாத்தளை மாவட்டத்தில் கலேவல பிரதேசத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

கலேவல பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 145 பேருக்கு  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதகையில் 9 பேர் அடையானம் காணப்பட்டுள்ளதுடன்  95 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி தொற்றாளர்களில் 5 வயது சிறுவனும் அடங்குவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று!

கொழும்பிலுள்ள  ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய நடவடிக்கை மையம் இன்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக குறித்த 5 நட்சத்திர ஹோட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஹோட்டலில் உடற்பயிற்சி பிரிவில் பணியாற்றும் குழுவின் ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று நேற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக  உடற்பயிற்சி பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றுக்குள்ளானோருடன் முதல் மற்றும் இரண்டாவது  தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் இனங்காணப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளார்கள் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீபாவளியை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள் 

கொரோனா நிலமையைக் கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து சமய அனுட்டானங்களில் ஈடுபட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுமாறு வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன தெரிவித்துள்ளார்

இந்து மக்களின் பிரதானமான ஒரு நிகழ்வாகிய தீபாவளி பெருநாள் வருகின்றது. சென்ற வருடங்களைப் போல் அல்லாது தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா நிலமையினைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட அறிவுரைகளின் பிரகாரம் இந்த நிகழ்வினைக் கொண்டாடுபடியும் தற்போதைய கொரோனா நிலையை கருத்தில் கொண்டு சுகாதார திணைக்களத்தினால் வழங்கிய அறிவுரைகளுக்கு அமைய கோவில்களில் பூஜைகளுக்கு ஆகக்குறைவாக எவ்வளவு பேர் தேவையோ அவர்களை மாத்திரம் வைத்து பூஜை செய்யவும். இயலுமானவரை மக்கள் கோவில்களுக்கு செல்லாது வீட்டில் இருந்தவாறே சமய அனுட்டானங்களில் ஈடுபடடியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version