Site icon ilakkiyainfo

சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம்

 

பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்து உள்ளன.

பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்து உள்ளன.

இதனை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த தமிழனின் பெருமையை நாம் வியக்காமல் இருக்க முடியாது.

அணுத் துகள் அசைந்து கொண்டே இருக்கும் என்ற உண்மையை, நடராஜர் வாயிலாக உணர்த்தும் படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய நம் முன்னோர்களின் அறிவு அசாத்தியமானது.

திருமந்திரத்தை எழுதிய திருமூலரும் கூட 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இதனைக் கண்டறிந்து குறிப்பிட்டுள்ளார். அவர் தனது திருமந்திரப் பாடல் ஒன்றில்,

`மானுடராக்கை வடிவ சிவலிங்கம்

மானுடராக்கை வடிவ சிதம்பரம்

மானுடராக்கை வடிவ சதாசிவம்

மானுடராக்கை வடிவம் திருக்கூத்தே’ என்று குறிப்பிடுகிறார். இதற்கு மனிதன் வடிவில் சிவலிங்கம். அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம் என்பது பொருளாகும்.

திருமூலரின் திருமந்திரம் உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும். நம் முன்னோர்களின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு அற்புதமும், அதிசயமும் ஒளிந்திருக்கிறது.

அதைக் கண்டறிய நமக்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படலாம். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்களை இங்கே பார்ப்போம்.

சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்திருக்கும் இடமானது, பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதி என்று கூறப்படுகிறது.

பஞ்சபூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் ஆகிய மூன்றும், மிகச் சரியாக ஒரே நேர்கோட்டில், தீர்க்க ரேகையில் அமைந்துள்ளன.

மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவிலின் 9 நுழைவு வாசல்களும், மனித உடலில் இருக்கும் நவ துவாரங்களைக் குறிக்கின்றன.

நடராஜர் கோவில் விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டு உள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 முறை சுவாசிக்கிறான் என்பதைக் குறிப்பதாகும்.

பொற்கூரையில் 21,600 தகடுகளை வேய, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 72 ஆயிரம் என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கிறது. இதில் கண்ணுக்கு தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

சிதம்பரம் கோவிலில் பொன்னம்பலம் சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டு உள்ளது. இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். அந்த இடத்தை அடைய 5 படிகளை ஏற வேண்டும்.
இந்தப் படிகள் பஞ்சாட்சரப்படி என்று அழைக்கப்படுகிறது. அதாவது சி, வா, ய, ந, ம என்ற ஐந்து எழுத்தே அது.

கனகசபை பிற கோவில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகிறது. இந்த கனகசபையை தாங்க 4 தூண்கள் உள்ளன. இந்த தூண்கள், 4 வேதங்களை குறிக்கின்றது.

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64+64 மேற்பலகைகளை கொண்டு உள்ளது. இது 64 கலைகளை குறிக்கின்றது.

பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கிறது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள் 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிக்கிறது.

Exit mobile version