சென்னை : காக்கா முட்டை, வடசென்னை, க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இந்த நிலையில் கெட்ட வார்த்தையில் திட்டி ஹீரோயின் சான்ஸ் வாங்கின முதல் நடிகை நான்தான் என சுவாரசியமான தகவலை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.

அட்டகத்தியில் சிறிய வேடத்தில்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதன்பிறகு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்து வந்தார்.

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக

இந்த நிலையில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. பொதுவாக இளம் நடிகைகள் யாரும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதை ஒரு சவாலாக ஏற்று அம்மா காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடத்து பாராட்டுகளை பெற்றதோடு அந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

வடசென்னை பொண்ணு
காக்காமுட்டை வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடித்து வருகிறார்.

பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவான படம் வடசென்னை. முழுக்க முழுக்க வட சென்னையை பற்றி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஹீரோயினியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார்.

வடசென்னை பொண்ணுக்கு ஏற்ற தோற்றம் பாடி லாங்குவேஜ் என அனைத்தும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பக்காவாக பொருந்தி இருந்தது

எதுவும் சொல்லவில்லை
இந்த நிலையில் வடசென்னை படத்தில் நடிக்கும் வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது என்ற தகவலை ஐஸ்வரியா தற்போது பகிர்ந்துள்ளார்.

அப்போது வட சென்னை படத்திற்கான ஆடிஷன் போய்க்கொண்டிருந்தது நானும் போயிருந்தேன்.

வெற்றிமாறன் சார் என்னை பார்த்துவிட்டு எதுவும் சொல்லவில்லை திடீரென மொபைல் கேமராவை ஆன் செய்து உனக்கு என்னென்ன கெட்ட வார்த்தை எல்லாம் தெரியுமோ அதை எல்லாம் தீட்டு என்றார்..

வாய்க்கு வந்தபடி கெட்டவார்த்தை
எனக்கு ஒரே ஷாக்கா இருந்தது.

அவர் மீண்டும் உனக்கு கெட்ட வார்த்தை என்னென்ன தெரியும் எந்த அளவிற்கு மோசமாக தெரியுமோ அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பேசுங்க என வெற்றிமாறன் மீண்டும் ஒருமுறை சொன்னார் நானும் எனக்கு வாய்க்கு வந்தபடி தெரிந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் மூச்சுவிடாமல் பேசி முடித்தேன்.

அதை பார்த்த வெற்றிமாறன் திடீரென கேமராவை ஆப் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

முதல் நடிகை நான்தான்

நான் அவரிடம் சென்று கேட்டேன் என்ன சார் ஓகேவா என கேட்டேன் .. எப்ப ஷூட்டிங் வச்சிக்கலாம்..

நீதான் இந்த படத்துக்கு ஹீரோயின்னு சொன்னாரு .. எனக்கு அளவில்லாத சந்தோஷம். இப்படித்தான் கெட்டவார்த்தை பேசி வடசென்னையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன். கெட்ட வார்த்தை பேசி வாய்ப்பு பெற்ற முதல் நடிகை நானாகத்தான் இருக்க முடியும் என இந்த சுவாரசியமான தகவலை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version