காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரம் அருகே கடந்த 18-ந் தேதி 23 வயதுடைய இளம் பெண் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் காவேரி பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன் என்பவரின் மனைவி பிரியா என்பது தெரியவந்தது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விபச்சார புரோக்கருடன் சேர்ந்து பிரியா விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த நவீன் கள்ளக்காதலி கல்பனாவுடன் சேர்ந்து பிரியாவை கொன்றதாக ஒப்புகொண்டார். இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பேராசிரியரை பெண்ணுடன் சேர்த்து வைத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 4 பேர் கைது

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 60 வயதான பேராசிரியர் ஒருவர், தரமணியில் உள்ள மத்திய அரசின் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர், கோயம்பேட்டை சேர்ந்த ராதா (வயது 40) என்பவருக்கு ரூ.4½ லட்சம் கடன் கொடுத்தார். ஆனால், அந்த பணத்தை திருப்பி தராததால் ராதா மீது 2019-ம் ஆண்டு சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு ராதாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதை அறிந்த ராதா, தொலைபேசி மூலம் பேராசிரியரை தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டார். பின்னர் பணத்தை திரும்பத் தருவதாக கூறி, கொடுங்கையூரில் உள்ள தனது தோழி புஷ்பா வீட்டுக்கு அழைத்தார்.

அதை நம்பி அங்கு சென்ற பேராசிரியருக்கு குடிநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அதை குடித்து மயங்கிய பேராசிரியரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி, லட்சுமி என்ற பெண்ணுடன் அவரை சேர்த்து வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்தார்.

பின்னர், அந்த வீடியோவை காட்டி இனிமேல் பணத்தை திருப்பி கேட்டால், இந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என பேராசிரியரை ராதா மிரட்டினார்.

இதுபற்றி பேராசிரியர் அளித்த புகாரின்பேரில், கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா மற்றும் அவரது தோழி புஷ்பா(49), இதற்கு உடந்தையாக இருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த லட்சுமி(30), அவருடைய கணவர் முருகன்(40) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version