ilakkiyainfo

விருதுகளை குவித்த சூரரைப் போற்று

68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப்போனது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஐந்து பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று இதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும் சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் சிறந்த திரைக்கதைக்கான விருது ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதாகொங்கரா இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறந்த பியூச்சர் ஃபிலிம் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு

68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேரவான படங்கள், கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதில் சூரரைப் போற்று படத்துக்கு ஐந்து விருதுகள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.

‘ஃபீச்சர் படம்’ என்ற சிறந்த திரைக்கதை பிரிவிற்கான நடுவர் குழுவின் தலைவரான திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஷா, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களுக்கு கிடைத்த விண்ணப்பங்கள் மற்றும் நாங்கள் பார்த்த படங்களின் எண்ணிக்கையை நினைத்துப்பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், மிக கடினமான கொரோனா காலங்களில் இந்த படங்கள் தயாரிக்கப்பட்டன,” என்று கூறினார்.ஃபீச்சர் திரைப்படம் அல்லாத பிரிவுக்கான நடுவர் குழுவுக்கு சித்ரர்த்த சிங் தலைமை தாங்கினார். மேலும் சினிமா குறித்த சிறந்த எழுத்தாளர் என்ற பிரிவுக்கு பத்திரிகையாளர் ஆனந்த் விஜய் தலைமை தாங்கினார்.விருதுக்கு தேர்வான படங்கள் மற்றும் அவை தேர்வான பிரிவுகளின் விவரம் கீழே;

சிறந்த நடிகர்சூரரைப் போற்று (தமிழ்); நடிகர்: சூர்யாதன்ஹாஜி :தி அன்சாங் வாரியர் (இந்தி); நடிகர்: அஜய் தேவ்கன்

சிறந்த நடிகை: சூரரைப் போற்று (தமிழ்); நடிகை: அபர்ணா பாலமுரளி

சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று (தமிழ்) கதை வசன எழுத்தாளர்: ஷாலினி உஷா நாயர் & சுதா கொங்கராமண்டேலா (தமிழ்); வசனகர்த்தா: மடோன் அஷ்வின்

சிறந்த துணை நடிகைசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (தமிழ்); நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி

சிறந்த இயக்குநர்இயக்குநர் ஆர்.வி. ரமணி (ஓ தட்ஸ் பானு – ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி படம்)

 

Exit mobile version