தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை இனக்கலவரங்களின் 39 ஆவது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

1983 ஆம் ஆண்டு , ஜூலை 23 ஆம் திகதி நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டது.

இதன்போது கொழும்பிலும், ஏனைய பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும், அழிக்கப்பட்டும், வடக்கு நோக்கி அகதிகளாகவும் விரட்டியடிக்கப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு பெரும் எண்ணிக்கையானோர் படுகாயம் அடைந்தனர்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தின் ஆதரவுடன்  குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்றையதினம் காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்றது.

இவ்வாறு, தமிழருக்கு எதிரான இனஅழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலையின் 39 ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு பல்வேறு, இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், 1983 ஜூலையில் கொடூரமாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை அடையாளப்படுத்தும் வகையில் கலைஞர் பிரபுத்த தனுஷ்க காலிமுகத்திடலில் ஆற்றுகையொன்றை அரங்கேற்றியிருந்தார்.

படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர்ந்து கலைஞர் பிரபுத்த தனுஷ்க என்பவரால் மேற்கொள்ளப்பட்ட வலிமிகுந்த கலைப்படைப்பாக மனதை உருக்கும் விதத்தில் அரங்கேற்றியிருந்தார்.

இதேவேளை, 1983 ஜூலை மாதம் அரசாங்கத்தின் ஆதரவுடன் காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்றையதினம் கொழும்பு பொரளை மயானமருகில் இடம்பெற்றது. வடக்கு-கிழக்கு-தெற்கு-மலையகம்-புலம்பெயர் சகோதரத்துவம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version