ஒப்பரேசன் லண்டன் பிரிட்ஜ்
இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு பின்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்களின் பெயர் அது.
1952 முதல் மகாராணி அரசசிம்மானசனத்தில் வீற்றிருக்கின்றார்.பிரிட்டனின் வரலாற்றில் எந்த முடிக்குரிய தலைவரும் இவ்வளவு காலம் ஆட்சிபுரிந்ததில்லை.
தனது காலத்தில் இரண்டாவது எலிசபெத் மகாராணி பல பிரிட்டிஸ் பிரதமர்களையும் 20க்கும்மேற்பட்ட ஒலிம்பிக்போட்டிகளையும் ஆறுமேற்பட்ட பாப்பரசர்களையும் சந்தித்துள்ளார் எதிர்கொண்டுள்ளார்.
பொதுநலவாயத்தின் மூலக்கல் அவர்- 600க்கும் மேற்பட்ட அமைப்புகள் தொண்டுநிறுவனங்களின்போசகர் அவர்.
உலகின் பல நாடுகளுடனான ஐக்கியஇராச்சியத்தின் உறவுகளில் முக்கிய பங்காற்றுகின்றார்.
ஆகவே அவரது மறைவு பல மாற்றங்களை கொண்டுவரும்,ஐக்கிய இராச்சியத்திற்கு மாத்திரமில்லை முழு உலகிற்கும்.
இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவின் பின்னர் என்ன நடக்கும்?
அவரது அந்தரங்க செயலாளர் எட்வேட் யங் மரண செய்தியை உடனடியாக பிரதமருக்கு அறிவிப்பார்.
அந்த செய்தி அனேகமாக இவ்வாறானதாக காணப்படும் லண்டன் பிரிஜ் இஸ் டவுன்
இதன் பின்னர் பிரதமர் ஒப்பரேசன் லண்டன் பிரிட்ஜினை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்குவார்.
அடுத்த சில நிமிடங்களில் மகாராணி இன்னமும் நாட்டின் தலைவராக உள்ள 15 நாடுகளிற்கு இந்த செய்தியை பிரதமர் பாதுகாப்பான வழிமுறைகள் ஊடாக அறிவிப்பார்.
அதன் பின்னர் இந்த அறிவிப்பை உலகின் 36 பொதுநலவாய நாடுகள் அதன் தலைவர்களிற்கு பிரதமர் தெரிவிப்பார்.
பின்னர் பங்கிங்காம் அரண்மணையின் வாயில்கதவில் கறுப்பு நிறத்தில் இந்த செய்தி காட்சிப்படுத்தப்படும்.அதேநேரத்தில் உலகின் ஊடகங்களிற்கு இந்த செய்தி தெரிவிக்கப்படும்.
ஒவ்வொரு ஊடக நிறுவனங்களும் இந்த செய்திக்காக தயாராக உள்ளன,ஒவ்வொரு வானொலி நிலையத்திலும் இவ்வாறான தேசிய பேரிடரை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
பிபிசியின் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தப்படும்.
செய்திவாசிப்பவர்கள் எந்நேரமும் தயாராக உள்ள கறுப்புநிற ஆடைகளிற்கு மாறுவார்கள்.
வழமையாக சிவப்பு நிறத்தில் காணப்படும் பிபிசி என்பது கறுப்பு நிறத்திற்கு மாறும்.
செய்திதாள்கள் தொலைக்காட்சிகள் வானொலி நிலையங்கள் பல நாள் ஒலிஒளிபரப்பிற்கு தயாராகஉள்ளன.
இரண்டாவது எலிசபெத் மகாராணி உயிரிழந்த அதேதினத்தில் அவரது மூத்த புதல்வர் சார்ல்ஸ் உடனடியாக மன்னராவார்.
மகாராணியின் மறைவினை குறிக்கும் விதத்தில் பங்குசந்தைகள் வர்த்தக நிலையங்கள் போன்றவை மூடப்படலாம்.
இறுதி நிகழ்விற்கு முன்னர்
மகாராணி மறைந்த மறுநாள் சார்ல்ஸ் உரையாற்றுவார் அது நேரடியாக ஒலிபரப்பாகும், ஹைட் பார்க் லண்டனில் 41 பீரங்கி வேட்டுகளின் மத்தியில் அரசாங்கம் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்,அதன் பின்னர் சார்ல்ஸ் மன்னர் ஐக்கிய இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் ஒவ்வொரு நாட்டினதும் தலைவர்களை தலைநகரங்களில் சந்திப்பார், பின்னர் லண்டன் திரும்புவார்.
இந்த காலப்பகுதியில் தொலைக்காட்சிகள் ஏற்கனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள மகாராணி குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும்.
மகாராணிக்கு மரியாதை செய்யும் விதத்தில் பிபிசி நகைச்சுவை நிகழ்ச்சிகளை இடைநிறுத்தும்.
மகாராணியின் மறைவிற்கு நான்கு நாட்களின் பின்னர் மகாராணியின் உடல் இராணுவமரியாதையுடன் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் ஹோலிற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்.
அடுத்த நான்கு நாட்களிற்கு அவரது உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படும். மன்னர் சார்ல்ஸ் குடு;ம்பத்தினர் விசேடபிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.
அதன் பின்னர் மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களிற்காக கதவுகள் திறக்கப்படும்.
இறுதி நிகழ்வுகள்
பிரிட்டிஸ் மகாராணி காலமாகி பத்து அல்லது 12 நாட்களிற்கு பின்னர் இறுதி நிகழ்வுகள் இடம்பெறும்.
இறுதிநிகழ்வு இடம்பெறும் நாள் ஐக்கிய இராச்சியம் முழுவதும் விடுமுறை தினமாக காணப்படும் என்பது உறுதி.
இரண்டு வாரங்களில் இரண்டாவது தடவை பங்குசந்தை மூடப்படும்,பல வர்த்தக நடவடிக்கைள் இடம்பெறாது,
11 மணிக்கு பின்பென் ஒலிக்கும்- நாடு மௌனமாகும், மகாராணியின் பிரேதப்பெட்டி வெஸ்ட் மினிஸ்டர் அபேயின் உள்ளே கொண்டுவரப்படும்,அங்கு காத்திருக்கும் விசேடமாக அழைக்கப்பட்ட 2000 பேர் தங்கள் தலைகளை தாழ்த்தி அஞ்சலி செலுத்துவார்கள், மதநிகழ்வுகளின் பின்னர்அவரது உடல் windsor castle எடுத்துச்செல்லப்படும் அதன் பின்னர் இறுதியாக st george’s chapelஎடுத்துச்செல்லப்படும் அங்கு தனது தந்தைக்கு அருகில் எலிசபெத் மகாராணி நிரந்தரமாக ஓய்வெடுப்பார்.
இறுதிநிகழ்வு இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வு இடம்பெறலாம்.
எதிர்வரும் மாதங்களில் ஐக்கிய இராச்சியத்தில் நூற்றுக்கணக்கான மாற்றங்கள் நிகழக்கூடும்,மன்னரின் படத்துடன் பிரிட்டனின் புதிய நாணயம் வெளியாகும்,மகாராணியின் படத்துடனான நாணயம் மெல்லமெல்ல பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும்.
முத்திரைகள் கடவுசீட்டுகள் பொலிஸ் இராணுவசீருடைகள் போன்றவையும் இந்த மாற்றங்களை சந்திக்கும்.
தேசியகீதம் கோட் சேவ் த கிங் என மாற்றப்படும்.