கோஹினூர் என்பது 105.6 காரட் நிறமற்ற வைரமாகும், இது 13 ஆம் நூற்றாண்டில் ஆந்திர பிரதேசத்தில் குண்டூருக்கு அருகில் காகதீய வம்சத்தால் முதலில் வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

kohinoor crown

பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் வியாழக்கிழமை காலமானார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து, கோஹினூர் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கைகளால் சமூக ஊடகங்கள் பரபரப்பாக மாறியது.

கோஹினூர் என்பது 105.6 காரட் நிறமற்ற வைரமாகும், இது 13 ஆம் நூற்றாண்டில் ஆந்திர பிரதேசத்தில் குண்டூருக்கு அருகில் காகதீய வம்சத்தால் முதலில் வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

பல ஆண்டுகளாக இந்த வைரம், டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கும், பின்னர் முகலாயப் பேரரசுக்கும் சென்றது, அதைத் தொடர்ந்து பாரசீக படையெடுப்பாளர் நாதிர் ஷா அதை ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் சென்றார்.

இது 1809 இல் பஞ்சாபின் சீக்கிய மகாராஜாவான ரஞ்சித் சிங்கை, அடைவதற்கு முன்பு வெவ்வேறு வம்சங்களைக் கடந்து சென்றது.

சிங்கின் வாரிசு, ஆங்கிலேயர்களிடம் இராச்சியத்தை இழந்ததால், கோஹினூர் காலனித்துவ ஆட்சியின் போது ராணி விக்டோரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

விக்டோரியா மகாராணி அதை ஒரு ப்ரூச் போல அணிந்திருந்தாலும், அது விரைவில் கிரீட நகைகளின் ஒரு பகுதியாக மாறியது – முதலில் ராணி அலெக்ஸாண்ட்ராவின் கிரீடத்திலும் பின்னர் ராணி மேரியின் கிரீடத்திலும் கோஹினூர் வைரம் இடம்பிடித்தது.

இறுதியாக, இது 1937 இல் நடைபெற்ற முடிசூட்டு விழாவிற்காக, மன்னர் ஆறாம் ஜார்ஜ் மன்னரின் மனைவி எலிசபெத் மகாராணிக்காக செய்யப்பட்ட அழகான கிரீடத்தின் ஒரு பகுதியாக மாறியது.

பிளாட்டினம் பிரேம் செட் உடன் 2,800 வைரங்களைக் கொண்ட கிரீடத்தின் கீழ் பகுதியில், முன் இருக்கும் குட்டி சிலுவையில், இந்த கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டுள்ளது.

ராணி அலெக்ஸாண்ட்ரா மற்றும் ராணி மேரியின் கிரீடங்களில் கோஹினூர் வைரம் அடுத்தடுத்து பொருத்தப்பட்டு, மீண்டும் இந்த கிரீடத்திற்காக ரீசெட் செய்யப்பட்டது, என்று ராயல் கலெக்ஷன் டிரஸ்ட் தெரிவித்துள்ளது.

மன்னர் ஆறாம் ஜார்ஜ் ஆட்சியின் போது பாராளுமன்றத்தின் மாநில திறப்பு விழாக்களிலும், மீண்டும் 1953 இல் அவரது மகள் இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவிலும் ராணி எலிசபெத் இந்த கிரீடத்தை அணிந்திருந்தார்.

அது ஏப்ரல் 2002 இல் அவரது சவப்பெட்டியில் மேல் இருந்தது. அதுதான் பொதுவில் கிரீடத்தின் கடைசி தோற்றமாகும்

Share.
Leave A Reply

Exit mobile version