கவுரி கவுரா பூஜையையொட்டி சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் சாட்டை அடி வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் கோ பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையில் பங்கேற்கும் பக்தர்கள், பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினால் துன்பங்கள் நீங்கும் என நம்பிக்கை உள்ளது.

இந்நிலையில் கோயிலுக்குச் சென்ற முதலமைச்சர் பூபேஷ் பாகல், தனது வலது கையை நீட்டி பூசாரியிடம் சாட்டை அடி வாங்கினார்.

சத்தீஸ்கரில் கோவர்த்தன பூஜையாக கொண்டாடப்படுகிறது. தற்போது சத்தீஸ்கர் மாநில முதல்வராக இருக்கும் பூபேஷ் பாகேல் ஒவ்வொரு ஆண்டும் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தூர்க் மாவட்டத்தின் ஜன்கிரி என்ற கிராமத்தில் கோவர்த்தன பூஜையில் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த பூஜையின் ஒரு நிகழ்ச்சியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை சவுக்கால் அடிக்கும் வழக்கம் உள்ளது.

அப்படி சவுக்கால் அடி வாங்கினால் உடல் மற்றும் மனதில் உள்ள பிரச்சனைகள் நீங்கி நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ்பாகில் கலந்து கொண்டார் சுவாமி தரிசனத்திற்கு பிறகு தனது கையை நீட்டி சவுக்கால் அடி வாங்கினார். முதல்வர் ஐந்து அடிகளுக்கு மேல் அவர் வாங்கிய நிலையில் அருகில் இருந்தோர் அவரை உற்சாகப்படுத்தினர்.

தற்போது இந்த வீடியோவை அவர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

இது குறித்து பேசிய பூபேஷ் பாகேல், ’சவுக்கடி வாங்குவது பெரிய பிரச்சனை இல்லை. இது போன்ற நிகழ்ச்சிகள் விவசாயிகள் நன்மைக்காக பின்பற்றப்படுகிறது,

இதில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் நம்மை இது பணிவாக வைத்திருக்கும் என கூறியுள்ளார்.

மக்களின் நலனுக்காக ஆண்டுதோறும் இந்த பூஜையில் அவர் கலந்து கொள்வார் என சத்தீஸ்கர் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதேபோல கடந்த ஆண்டு பூபேஷ் பாகேல் சவுக்கடி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version