முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் ஏரல் எடுக்கச் சென்ற இளைஞன் ஏரியில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

05 ஆம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பினை சேர்ந்த 26 அகவையுடைய செ.நிசாந்தன் என்ற இளைஞனே கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைப்பாலை பகுதியினைச் சேர்ந்த இளைஞன் குடும்ப வறுமை காரணமாக உணவுக்காக ஏரல் எடுக்க சென்றுள்ளார்.

தயார் மற்றும் பெரியம்மா ஆகியோரும் ஏரல் எடுக்க சென்ற நிலையில் அவர்களின் கண்முன்னே இளைஞன் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version