வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவிற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டது.

மோட்டார் சைக்கிலுக்கு அருகில் காணப்பட்ட சடலம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மிகிந்தலை பகுதியினை சேரந்த 45 வயதுடைய பொலிஸ் சார்ஜன் வசந்த சந்தன நாயக்க என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த மரணத்திற்கு காரணம் விபத்தாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version