பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான ‘பர்ஹானா’ திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பர்ஹானா படத்திற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: ‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பர்ஹானா’.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன்,

ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான ‘பர்ஹானா’ திரைப்படம் (மே 12) திரைக்கு வந்தது. இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை, தி.நகரில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பர்ஹானா படத்திற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version