ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் பதில் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில் பிரிட்டன் ஸ்டோர்ம் சடோ என்ற அதிநவீன ஏவுகணையை உக்ரைனிற்கு வழங்கியுள்ளது.
பிரிட்டன் உக்ரைனிற்கு ஸ்டோர்ம் சடோ அதிநவீன ஏவுகணைகளை வழங்கியுள்ளதன் மூலம் மிகவும் எதிர்பார்க்கப்படும் பதில் தாக்குதலிற்கு முன்னதாக உக்ரைனின் நீண்ட தூரம் தாக்கும் திறனை அதிகரித்துள்ளது.
ரஸ்யாவின் ஈவிரக்கமற்ற தன்மைக்கு எதிராக உக்ரைன் தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு இந்த ஏவுகணை என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் பென்வலெஸ் தெரிவித்துள்ளார்.
துல்லியமாக தாக்கும் திறன் உள்ள நீண்டதூர குறுஸ் ஏவுகணையான ஸ்டோர்ம் சடோவை பிரிட்டனும் பிரான்சும் இணைந்து உருவாக்கியுள்ளன.
எனினும் இந்த ஏவுகணையை ரஸ்யாவின் நிலப்பரப்பினை இலக்குவைத்து பயன்படுத்தப்போவதில்லை என்ற உறுதிமொழியை உக்ரைன் வழங்கியுள்ளது .
பிரிட்டிஸ் அதிகாரிகள் ரஸ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியாவை உக்ரைனின்ஒரு பகுதி என்றே அடையாளப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.கிரிமியாவை சட்டபூர்வமாக ரஸ்யா ஆக்கிரமித்துள்ளது என பிரிட்டிஸ் அதிகாரிகள் தெரிவித்துவருகின்றனர்.
இந்த ஏவுகணை உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விடயம் என சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரியொருவர் யுத்தம் ஆரம்பமானது முதல் உக்ரைன் கோரிவந்த பலத்தை இது வழங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.