முல்லைத்தீவில் இருந்து மத்தியகிழக்கு நாடான கட்டாருக்கு வேலைக்காக சென்ற இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

காட்டாரில் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே சடலமாக மீட்கப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாட்களாக வேலைக்கு வராத காரணத்தால் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் விசுவமடு – இளங்கோபுரம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப வறுமை காரணமாக குறித்த இளைஞன் வேலைக்காக கட்டாருக்கு சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மற்றய இளைஞன் பற்றிய விபரங்கள் என்னும் கிடைக்கவில்லை…

Share.
Leave A Reply

Exit mobile version