அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் ஃபீனிக்ஸ் பகுதிக்கு வடக்கே சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள காட்டன் உட் பகுதியில், ஒரு பெண் தனது காரை நகர்த்தும்போது எதிர்பாராத விதமாக காரில் சிக்கி அவரது 13 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.

இது குறித்து யாவபாய் கவுண்டி ஷெரிப் அலுவலக அறிக்கை தெரிவித்திருப்பதாவது: ஜூலை 6ம் தேதி, யாவாபாய் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், தனது 13 மாத குழந்தையின் மீது காரை ஏற்றிவிட்டதாக தெரிவித்தார்.

ஜஃப்ரியா தார்ன்பர்க் எனும் அப்பெண்மணி தனது காரை தனது வீட்டிற்கு வெளியே காரை பார்க்கிங் செய்துள்ளார். அவரது குழந்தை, குழந்தைகளுக்கான இருக்கையில் (கேனோபி) இருந்திருக்கிறது. குழந்தையை அதன் இருக்கையோடு (கேனோபி) எடுத்து காரை விட்டு சற்று தள்ளி பாதுகாப்பான தூரத்தில் வைத்ததாக ஜஃப்ரியா நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் காரின் அருகிலேயே வைத்திருக்கிறார்.

பின்னர் காரை சரியான இடத்தில் பார்க்கிங் செய்வதற்காக நகர்த்தி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை அமர்ந்திருந்த “கேனோபி” காரின் முன்புற டயரில் சிக்கிக்கொண்டிருக்கிறது. உடனே காரை நிறுத்தி இறங்கி வந்து பார்த்தபோது குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவசர உதவிக்கான 911 எண்ணை அழைத்திருக்கிறார்.

ஷெரிப் அலுவலக மருத்துவப் பணியாளர்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். குழந்தையை உடனடியாக வெர்டே பள்ளத்தாக்கு மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் குழந்து இறந்துவிட்டது. இவ்வாறு ஷெரிப் அலுவலகம் கூறியிருக்கிறது.

ஷெரிப் அலுவலக குற்றப்புலனாய்வுப் பணியகம் இப்போது சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. மகளின் மரணம் தொடர்பாக தாய் மீது குற்றம் சாட்டப்படுமா? என்பது தெரியவில்லை.

 

Share.
Leave A Reply

Exit mobile version