மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியாள்தேவாலயத்தில் பெண்களுடைய கழுத்தில் இருந்த 3¼ பவுண் தங்க ஆபரணங்களை அறுத்து கொள்ளையிட்ட 4 பெண்கள் உட்பட 9 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நகரின்மத்திய வீதியிலுள்ளமரியாள் தேவாலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் திருவிழாவான இன்று பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுண் தங்க சங்கிலியை 4 பேர் கொண்ட பெண் கொள்ளைக் குழுவினரைச் சேர்ந்த ஒரு பெண்அறுத்துள்ளார்

இதனையடுத்து தப்பி ஓட முற்பட்ட பெண் கொள்ளைக்குழுவைச் சேர்ந்த 3 பெண்களை அங்கிருந்த மக்கள் மடக்கி பிடித்தனர்.

இதன்போது ஒருவர் தப்பி ஓடியுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு வத்தளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 27, 33 வயதுடையவர்கள் எனவும், மூன்று பேரும் உறவினர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதேவேளை, மாமாங்கேஸ்வரர் ஆலய தேர்திருவிழாவான இன்று காலை பக்தர்கள் தேர் இழுத்து கொண்டிருந்தபோது வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த முக்கால் பவுண் தங்க சங்கிலியை அறுத்தெடுத்த புத்தளம் பகுதியைச் சோந்த 45 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே களுவாஞ்சிக்குடி மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது

இவ் இரு வெவ்வேறு சம்பவங்களில் 4 பெண்களும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய திருக்கோவில் கஞ்சரம் குடாவைச் சேர்ந்த 2 பெண்கள் ஆண் ஒருவர் மற்றும் வவுனியா மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

அதேவேளை, ஆலய தேர் திருவிழாவில் பிரபல வர்த்தகர் ஒருவரின் 7 பவுண் தங்கசங்கிலி, மற்றும் 4 பெண்களுடைய 4 பவுண், 2 பவுண், 3 பவுண், 2¾ பவுண் கொண்ட 18 ¾ பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதாகவும் ஆலயத்தில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version