யாழ்ப்பாணத்தில் உணவருந்திவிட்டு பின்னர் படுக்கைக்குச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த மிதுன்ராஜ் (வயது 31) எனும் இளைஞனே இரவு உணவருந்தி விட்டு உறங்கச் சென்ற சமயம் உயிரிந்துள்ளார்.

இவர் தனது வீட்டில் நேற்று திங்கட்கிழமை (21) வழமை போன்று இரவு உணவை அருந்தி படுக்கைக்குச் சென்றுள்ளார்.

எனினும், நீண்டநேரமாக அவர் கட்டிலில் அசைவின்றி காணப்பட்டதையடுத்து, சந்தேகம் கொண்ட பெற்றோர் அவரை எழுப்ப முயற்சித்துள்ளனர்.

அவர் எழும்பாத காரணத்தால் பதற்றமடைந்த பெற்றோர் அவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவரது சடலம் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version