மடகாஸ்கரில் மைதானம் ஒன்றுக்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு ஆபிரிக்க நாடான மடகாஸ்கரில் உள்ள அன்டனானரிவோவில் இந்திய பெருங்கடல் தீவு விளையாட்டுகளின் தொடக்க விழா நேற்று ஆரம்பமானது. மடகாஸ்கர் தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தின் நுழைவாயிலில் குவிந்திருந்தனர்.

திடீரென ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் நுழைய முயன்றதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. மைதானத்தின் காவலாளிகளால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நெரிசலில் சிக்கி 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 80 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version