இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) புற்றுநோயாளிகளுக்கு உலகின் முதல் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சிகிச்சையின் காலத்தை சுமார் 75% குறைக்கலாம்.
அதற்கு அந்நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது இந்த புதிய தடுப்பூசி, “atezolizumab” நோயெதிர்ப்பு சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்காக வழங்கப்பட உள்ளது