பொத்­து­வி­லி­ருந்து நல்லூர் வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட தியாக தீபம் திலீ­பனின் ஊர்­திப்­ப­வனி திருக்­கோ­ண­மலை கப்பல் துறையில் வைத்து சிங்­க­ளக்­கா­டை­யர்­க­ளினால் தாக்கி சிதைக்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­வ­னியில் வந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்­வ­ராஜா கஜேந்­தி­ரனும் தாக்­கப்­பட்­டுள்ளார். பொலிஸார் முன்­னி­லை­யி­லேயே இத்­தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. சிங்­களப் பெண்­களும் இத்­தாக்­கு­தலில் பங்கு பற்­றி­யி­ருக்­கின்­றனர். தமிழ் ஊட­க­வி­ய­ளா­ளர்­களும் அச்­சு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

தமிழ்ப்­பா­ரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்த தாக்­கு­த­லுக்குப் பலத்த கண்­ட­னத்தைத் தெரி­வித்­துள்­ளனர். ஸ்ரீதரன், சுமந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் ஆகியோர் உட­ன­டி­யா­கவே கண்­ட­னங்­களைத் தெரி­வித்­துள்­ளனர். தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை­சே­னா­தி­ராஜா, யாழ்.­ந­க­ர­ சபையின் முன்னாள் மேயர் மணி­வண்ணன் போன்­றோரும் கண்­ட­னங்­களைத் தெரி­வித்­துள்­ளனர்.

தமிழ் நாட்­டி­லி­ருந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ‘விடு­த­லைச்­சி­றுத்­தைகள் ‘ கட்­சியின் தலை­வ­ரு­மான திரு­மா­வ­ளவன் ‘நாம் தமிழர்’ கட்­சியின் தலைவர் சீமான் ஆகி­யோரும் பலத்த கண்­ட­னத்தை தெரி­வித்­துள்­ளனர். லண்­ட­னிலும் கன­டா­விலும் இதனைக் கண்­டித்து போராட்­டங்­களும் இடம் பெற்­றுள்­ளன. கன­டாவில் இலங்கைத் தூது­வ­ரா­ல­யத்­திற்கு முன்னால் போராட்டம் இடம் பெற்­றுள்­ளது.

நினை­வு­கூரல் என்­பது மக்­களின் அடிப்­படை உரிமை. அதைத் தடுப்­ப­தற்கு எவ­ருக்கும் எந்­த­ வித உரி­மையும் கிடை­யாது. பொலிஸார் தகுந்த பாது­காப்பைக் கொடுத்­தி­ருக்க வேண்டும். பெருந்­தே­சியவாதம் இந்த விழு­மி­யங்­களை பின்­பற்­று­வ­தற்கு சிறி­த­ள­வா­வது இடத்தைக் கொடுக்­க­வில்லை.

இங்கு அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டது திலீ­பனோ, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கஜேந்­தி­ரனோ அல்ல. மாறாக தமிழ்த்­தே­சியம் தான் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதுவும் தமிழர் தாய­கத்தின் தலை­ந­கரில் இந்த அவலம் இடம்­பெற்­றுள்­ளது. தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் பூர்­வீ­கக்­கு­டி­க­ளல்லர் பல­வந்­த­மாக தமிழர்தா­ய­கத்தின் கூட்­டி­ருப்பைச் சிதைப்­ப­தற்­காக குடி­யேற்­றப்­பட்­ட­வர்கள். அரசு தாக்­கு­த­லுக்­கான துணிவைக் கொடுத்­தி­ருக்­கின்­றது.

உண்­மையில் நினை­வு­கூரல் என்­பது புதிய தலை­மு­றைக்கு வர­லாற்றை கடத்­து­கின்­றது. தமிழ் மக்­க­ளுக்குத் தொடர்ச்­சி­யான விழிப்­பூட்­டலைச் செய்­கின்­றது. அதன் வழி தமிழ்த் தேசி­யத்தின் இருப்பைப் பாது­காக்­கின்­றது. இந்த உண்­மைகள் தான் தாக்­கு­த­லுக்கு கார­ண­மாக இருந்­தி­ருக்­கின்­றன.

இனப்­பி­ரச்­சினை என்­பதே தமிழ் மக்களின் தேச­மாக இருப்­பது அழிக்­கப்­ப­டு­வது தான். இதனால் எந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தாலும் இன அழிப்பைச் செய்து கொண்டே இருக்கும். இது ஒரு கலா­சார அழிப்பு. இது அரசின் செயல்­திட்­டத்தில் ஒன்­றாகும். எனவே அரசின் ஆத­ரவு இல்­லாமல், அதன் ஒத்­து­ழைப்பு இல்­லாமல் இந்த தாக்­குதல் நடந்­தி­ருக்­கு­மென கூற முடி­யாது.

உண்­மையில் இந்தத் தாக்­கு­த­லுக்­கான எதிர்­வி­னைகள் போது­மா­னது எனக் கூற­ மு­டி­யாது. தமிழ்ப்­பா­ரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒரு அறிக்­கை­யுடன் மட்டும் தமது கட­மை­களை முடித்துக் கொண்­டார்கள். பாரா­ளு­மன்­றத்­திலும் இதனை பேசு­பொ­ரு­ளாக்­க­வில்லை. பாரா­ளு­மன்­றத்தில் இதனைப் பேசு­பொ­ரு­ளாக்­கி­ய­வர்கள் மலை­யக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இரா­தா­கி­ருஸ்­ணனும் , வேலு­கு­மாரும் தான். மனோ கணே­சனின் அறிக்கை கூட இறுக்­க­மா­னது என கூற முடி­யாது. தமிழ்ப்­பா­ரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இதனை மைய­மாக வைத்து பாரா­ளு­மன்­றத்தை போர்க்­க­ள­மாக்­கி­யி­ருக்க வேண்டும்.

இங்கே இரண்டு விவ­காரங்கள் இருக்­கின்­றன. ஒன்று தமிழ் மக்­களின் அடிப்­படை உரி­மை­யான நினை­வு­கூரல் உரிமை இங்கு மீறப்­பட்­டுள்­ளது. இந்த உரிமை சர்­வ­தேச ரீதி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட உரிமை. ஐக்­கிய நாடுகள் சபை கூட இதனை அங்­கீ­க­ரித்­தி­ருக்­கின்­றது.

இரண்­டா­வது ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் சிறப்­பு­ரிமை இங்கு மீறப்­பட்­டுள்­ளது. தனது மக்கள் தொடர்­பாக செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் உரிமை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு உண்டு. அவ்­வாறு முன்­னெ­டுக்­கின்ற போது பாது­காப்பு கொடுக்க வேண்­டிய கடமை பொலி­ஸா­ருக்கு உண்டு.

எனவே இந்த இரண்டு விவ­கா­ரங்­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு பாரா­ளு­மன்­றத்தை போர்க்­க­ள­மாக்­கி­யி­ருக்­கலாம். கட்சி அர­சியல், தேர்தல் அர­சியல் கார­ண­மாக கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எந்­த­வித அக்­க­றை­யையும் காட்­ட­வில்லை. இவர்கள் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்தால் மலை­யக , முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மட்­டு­மல்ல எதிர்க்­கட்­சி­யி­லுள்ள சிங்­கள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் இதற்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கி­யி­ருப்பர்.

பாரா­ளு­மன்றம் தவிர்ந்த தமிழர் தாய­கத்­திலும் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். தியாக தீபம் திலீ­பனின் ஊர்­திப்­ப­வ­னியை வடக்கில் இன்­னமும் சிறப்­பா­ன­தாகச் செய்­தி­ருக்­கலாம். திரு­கோ­ண­மலை விவ­கா­ரத்தால் மக்கள் மிகவும் கோபப்­பட்ட நிலையில் இருக்­கின்­றனர். அவர்­களும் திர­ளாக பங்­கு­பற்­றி­யி­ருப்பர். இது நடை­பெற்­றி­ருந்தால் அடை­யாள ஊர்­திப்­ப­வனி பேரெ­ழுச்­சிப்­ப­வ­னி­யாக வெளிப்­பட்­டி­ருக்கும். வடக்­கி­லுள்ள நீதி­மன்­றங்­களும் சாத­க­மான நிலைப்­பாட்டை எடுத்­தி­ருப்­பதால் பாது­காப்பு பிரச்­சி­னையும் பெரி­தாக வந்­தி­ருக்­காது.

உண்­மையில் இதற்கு தடை­யாக இருந்­தமை கட்சி அர­சியல் தான். தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி தாம் முன்­னெ­டுக்­காமல் பொதுக்­கட்­ட­மைப்பு மூலம் முன்­னெ­டுத்­தி­ருந்தால் அனைத்து தேசிய கட்­சி­களும் இதில் பங்­கேற்புச் செய்­தி­ருக்கும். சிவில் அமைப்­புக்­களும் பங்­கேற்­றி­ருக்கும். தனித்து ஒரு கட்சி முன்­னெ­டுத்­ததால் ஏனைய கட்­சிகள் மட்­டு­மல்ல சிவில் அமைப்­புக்­களும் கூட பங்­கேற்­க­வில்லை. தேர்தல் நலன், கட்சி நலன் கார­ண­மாக அர­சியல் கட்­சிகள் பங்­கேற்க மாட்டாது. ‘கட்­சிச்சீல்’ தங்­க­ளுக்கும் குத்­தப்­படும் என்­பதால் சிவில் அமைப்­புக்­களும் பங்­கேற்­க­மாட்டாது. தமிழ்த்­தே­சி­யத்தில் அக்­கறை உள்ள தனி­ந­பர்­களும் பங்­கேற்க மாட்­டார்கள்.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தல் குறித்து பல்­வேறு விமர்­ச­னங்கள் இருந்­தாலும் பொது அமைப்பு முன்­னெ­டுத்­தது. மக்­களும் திர­ளாக கலந்து கொண்­டார்கள். பொத்­துவில் முதல் பொலி­கண்டி வரை போராட்­டத்தின் வெற்­றிக்கும் இதுவே கார­ண­மாகும். தமிழ் மர­பு­ரிமை பேர­வையின் முல்­லைத்­தீவு ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரான போராட்டம் வெற்­றி­ய­டை­வ­தற்கும் இதுவே காரணம். ‘எழுக தமிழ்’ போராட்­டங்கள் கட்­சி­களும் பொது அமைப்­புக்­களும் இணைந்து முன்­னெ­டுத்­ததால் அவையும் வெற்­றி­க­ளைத் ­தந்­தி­ருக்­கின்­றன.

குறைந்த பட்சம் இந்­தப்­ப­வனி தொடர்­பாக தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி இந்தத் தாக்­கு­தலின் பின்­ன­ரா­வது ஏனைய தமிழ்த்­தே­சிய கட்­சி­க­ளு­டனும் பொது அமைப்­புக்­க­ளு­டனும் ஒரு உரை­யா­டலை நடத்­தி­யி­ருக்­கலாம். அவர்கள் அதற்கு முன்­வ­ர­வில்லை. கட்­சி­க­ளுடன் பேசு­வ­தற்கு கொள்கை முரண்­பா­டுகள் இருக்­கலாம். 13ஆவது திருத்­தத்தை ஆத­ரிப்­ப­வர்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு தயா­ராக இல்லை என தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி ஏற்­க­னவே அறி­வித்­துள்­ளது. ஆனால், பொது அமைப்­புக்­க­ளுடன் பேசு­வ­தற்கு அவர்களுக்கு என்ன கொள்கை முரண்­பா­டுகள் இருக்­கின்­றன என்­பது அவர்­க­ளுக்­குத்தான் வெளிச்சம்.

தமிழ்த்­தே­சிய கட்­சி­க­ளுடன் பேசு­வ­தற்கு கொள்கை முரண்­பா­டுகள் இருந்­தாலும் நினை­வேந்­தலை தேச­மாக திரண்டு அனுஷ்டிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது. முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலில் ஏனைய கட்­சி­க­ளுடன் தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியும் பங்­கு­பற்­றி­யி­ருந்­தது. தமிழ் மக்­களின் அர­சியல் இலக்கு தொடர்­பான விவ­கா­ரங்­களில் முரண்­பட்டு நின்­றாலும் ஏனைய பொது விவ­கா­ரங்­க­ளி­லா­வது ஒருங்­கி­ணைவு அவ­சியம் .

தமிழர் தா­ய­கத்தில் பொது ஆர்ப்­பாட்­டங்­க­ளையோ, பணிப்­பு­றக்­க­ணிப்பு போன்ற போராட்­டங்­க­ளையோ நடத்­தி­யி­ருக்­கலாம். தாய­கத்தில் போராட்டம் இடம் பெற்­றி­ருந்தால் தமிழ்­நாட்­டிலும், புலம்­பெ­யர்­நா­டு­க­ளிலும் போராட்­டங்கள் எழுச்­சி­ய­டைந்­தி­ருக்கும். இவ்­வாறு நடந்­தி­ருந்தால் சர்­வ­தேச மட்­டத்தில் விவ­கா­ரத்தை பேசு­பொ­ரு­ளாக்­கி­யி­ருக்­கலாம்.

இந்த ஊர்­திப்­ப­வனி தொடர்­பாக தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி மீதும் பலத்த விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றில் கட்­சிக்­காழ்ப்­பு­ணர்­வு­களும் இருக்­கலாம். ஆனாலும் இந்த விவ­கா­ரங்­களை கொள்கை நிலையில் நின்று அணு­கு­வதே ஆரோக்­கி­ய­மா­னது. இங்கு தாக்­குதல் விவ­கா­ரத்­தையும், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் ஒழுங்­கு­ப­டுத்தல் விவ­கா­ரங்­க­ளையும் வெவ் வேறு தளங்­களில் தனித்­த­னி­யாகப் பார்க்க வேண்டும்.

தாக்­குதல் என்­பது தமிழ் மக்­களின் புறப்­பி­ரச்­சினை. முன்­னணி விவ­காரம் என்­பது தமிழ் மக்­களின் அகப் பிரச்­சினை. தாக்­கு­தலைப் பொறுத்­த­வரை அது தமிழ்த்­தே­சத்­திற்கு விழுந்த அடி. அது தமிழ் மக்­க­ளுக்கு பொது­வான பிரச்­சினை. இதனை எந்­த­வித வேறு­பாடும் இல்­லாமல் கண்­டிக்க வேண்டும். ஒழுங்­கு­ப­டுத்தல் தொடர்­பாக முன்­னணி மீது விமர்­ச­னங்­களை வைக்­கலாம். ஆனால் அது எந்த வகை­யிலும் தாக்­கு­த­லுக்கு எதி­ரான அலையை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தாக இருக்கக் கூடாது.

முன்­ன­ணியைப் பொறுத்­த­வரை புலி­களின் தொடர்ச்­சி­யான அர­சி­ய­லையே பின்­பற்ற முனை­கின்­றது. இது புலிகள் இயக்கம் விட்ட தவ­று­களை முன்­ன­ணியும் விட கார­ண­மா­கி­றது. ஸ்ரீலங்கா அர­சுக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் இடை­யி­லான முரண்­பாட்டில் புலி­களின் பாத்­திரம் முற்­போக்­கா­ன­தாக இருந்­தது.

ஆனால் தமிழ் மக்­க­ளுக்கும் புலிகள் இயக்­கத்­திற்கும் இடை­யி­லான உற­வு­களில் பல விமர்­ச­னங்கள் இருந்­தன. ஒருங்­கி­ணைவு அர­சி­யலில் அவர்கள் அக்­கறை செலுத்­த­வில்லை. தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதி­ரான போராட்டம் தேசத்தின் அனைத்து பிரி­வு­க­ளையும் இணைத்த ஐக்­கிய முன்­னணி மூலமே சாத்­தி­யப்­படும் என்­பதை அவர்கள் சிறிது கூட கவ­னத்தில் எடுக்­க­வில்லை. பிற்­கா­லத்தில் சில முயற்­சிகள் எடுக்கப்­பட்­டாலும் அது போது­மா­ன­தாக இருக்­க­வில்லை.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யமை ஒரு முற்­போக்­கான முயற்சி தான். அது இன்­னமும் விரி­வ­டைந்­தி­ருக்க வேண்டும். ஒருங்­கி­ணைவு அர­சியல் இல்­லா­த­தினால் தேசப் போராட்­டத்­திற்கு வெளியே பலர் தள்­ளப்­பட்­டனர். ஸ்ரீலங்கா அரசு அத­னைப்­ப­யன்­ப­டுத்­தி­யது என்­ப­தற்கு சான்­றுகள் நிறை­யவே உள்­ளன.

இதே தவ­றுகள் முன்­ன­ணி­யிலும் பல­மாக இருக்­கின்­றன. ஸ்ரீலங்கா அர­சிற்கும் தமிழ் மக்­க­ளுக்கும் இடை­யி­லான முரண்­பாட்டில் முன்­ன­ணியின் பாத்­திரம் முற்­போக்­கா­னது. குறிப்­பாக கஜேந்­தி­ர­கு­மாரின் மூன்று இயல்­புகள் மிகவும் கவ­னிக்க வேண்­டி­யவை. ஒன்று கொள்­கையில் உறு­திப்­பாடு. என்ன நெருக்­க­டிகள் வந்­தாலும் கொள்­கையில் விட்­டுக்­கொ­டுப்பை மேற்­கொள்­வ­தற்கு கஜேந்­தி­ர­குமார் தயா­ராக இருப்­ப­தில்லை. இரண்­டா­வது கஜேந்­தி­ர­கு­மாரை எவரும் விலைக்கு வாங்க முடியாது. மூன்றாவது தொடர்ச்சியாக அடையாளப்போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதாகும். இன்றுள்ள கட்சிகளில் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவது முன்னணி மட்டும் தான்.

மக்களுக்கும் கட்சிக்குமான உறவில் தான் முன்னணி கோட்டை விடுகின்றது. பல சந்தர்ப்பங்களில் மக்கள் திரள் எழுச்சிக்கு முன்னணியே தடையாகி விடுகின்றது. தமிழ்த்தேசிய சக்திகள் பலரை தமிழ்த்தேசிய அரசியலுக்கு வெளியே தள்ளி விடுகின்றது. தவிர, அரசியல் என்பது மூலோபாயத்தை மட்டுமல்ல தந்திரோபாயத்தையும் கொண்டது என்பதை கணிப்பில் எடுக்க தவறுகின்றது. தந்திரோபாய அரசியல் அதனிடம் மருந்துக்குக் கூட கிடையாது. மக்கள் திரள் அமைப்புக்களை தானும் கட்டுவதில்லை. மற்றவர்களையும் கட்டவிடுவதில்லை

தற்போது இரண்டு நெருக்கடிகளுக்கு தமிழ் அரசியல் முகம் கொடுக்கின்றது. ஒன்று பெருந்தேசியவாதத்திற்கு முகம் கொடுத்தல். இரண்டாவது சர்வதேச அரசியலை கையாளல். இரண்டு செயல் திட்டங்களையும் ஒருங்கிணைவு அரசியல் இல்லாமல் சிறிது கூட முன்னெடுக்க முடியாது. முன்னணிக்கு இந்த உண்மை தெரியாத ஒன்றல்ல. உண்மைகள் கண்டுகொள்ளப்படுவதை கட்சி அரசியல் தடுக்கின்றது.

தாக்குதலோடு தொடர்புடைய ஏனைய விவகாரங்களையும் தொடர் உறக்கத்திலிருக்கும் தமிழ் அரசியலை எவ்வாறு தட்டியெழுப்புவது பற்றியும் அடுத்த வாரங்களில் பார்ப்போம்.

சி.அ.யோதிலிங்கம் Virakesari

Share.
Leave A Reply

Exit mobile version