விலங்குகளை பார்த்தால் பயப்படும் சிறுவர்-சிறுமிகள் சிலர் உள்ளனர். சில சிறுவர்கள் விலங்குகளிடம் குறும்பு செய்வார்கள். சிலர் விலங்குகளுடன் நட்பாக பழகுவார்கள்.

அந்தவகையில், ஒரு சிறுமி மானுக்கு உணவளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 7 வினாடி மட்டும் கொண்ட இந்த வீடியோவில், இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்த ஒரு அழகான சிறுமி மானை பார்த்தவுடன் அதன் அருகே செல்கிறார்.

பின்னர் தனது கையில் இருந்து உணவை கொடுக்கிறார். மான் அதை சாப்பிடுகிறது. பின்னர் அந்த சிறுமி, மானுக்கு தலைகுனிந்து வணங்குவதை காண முடிகிறது.

இதைப்பார்த்த மானும் அந்த சிறுமியை நோக்கி தலையை ஆட்டி நன்றி தெரிவிப்பது போல் காட்சி உள்ளது. இந்த வீடியோ இதுவரை 5 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version