யாழ்ப்பாணத்தில் மர்ம காச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வாடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சி.கேனுசா (வயது- 24) ஒரு பிள்ளையின் தாய் ஆவார்.

கடந்த ஆறாம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர், வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் 10 ஆம் திகதி காலை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பிற்பகல் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version