மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் வீடு ஒன்றின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மவுன்டன் ரக சைக்கிள் ஒன்றை நேற்று சனிக்கிழமை (21) திருடிச் சென்ற நபர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

நேற்று (21) பகல் 12 மணியளவில் கூளாவடி முதலாம் குறுக்கு ‘ஏ’ வீதியிலுள்ள வீடொன்றின் முன்னால் நபர் ஒருவர் மவுன்டன் ரக சைக்கிளை நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் சென்று, பின்னர், அரை மணிநேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது, அங்கே சைக்கிள் களவாடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நபர் ஒருவர் சைக்கிளை திருடும் காட்சி அப்பகுதியிலுள்ள மற்றுமொரு வீடு ஒன்றின் முன்னால் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

அதன் அடிப்படையில், சைக்கிளை திருடிய நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனே அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version