கடந்த சனிக்கிழமை (21) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடிருப்பு பகுதியில் சிறுவர் பூங்கா ஒன்றில் இருந்து குழந்தையுடன் தம்பதியினர் சென்று கொண்டிருந்த போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்தவர் அவர்கள் மீது மோதியுள்ளார்.

குறித்த விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் பிள்ளை உயிர் பிழைத்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 33 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும், மலேசியாவில் மென்பொருள் பொறியாளர்களாக பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version