லியோ திரைப்படத்தின் 7 நாட்கள் வசூலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து, லோகேஷ் – விஜய் கூட்டணியில் மீண்டும் உருவான லியோ படத்திற்கு தொடக்கம் முதலே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக LCU-ல் படம் இடம்பெறுமா என்பதே பிராதனமான கேள்வியாக இருந்து வந்தது. இதனையடுத்து பல பிரச்னைகளுக்கும், சிக்கல்களுக்கும் இடையே அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் லியோ படம் நேற்று வெளியானது.

லியோ படத்தை பொறுத்தவரை கலவையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. முதல்பாதி நன்றாக இருக்கிறது என்றும் இரண்டாம் பாதி சுமாராக இருந்ததாகவும் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.

இருப்பினும், விஜய்யின் நடிப்பு நன்றாக இருந்ததாக பலரும் தெரிவித்துள்ளனர். துவக்க காட்சியில் இடம்பெற்ற ஹைனா தொடர்பான கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. சஞ்சய் தத், அர்ஜுன் போன்றவர்களின் கதாபாத்திரங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று பேசப்பட்டது. குறிப்பாக கடும் போட்டியே விஜய் – ரஜினி ரசிகர்களுக்கு இடையே தான்.

வழக்கமாக விஜய் – அஜித் ரசிகர்கள் இடையே தான் போட்டி இருக்கும். விஜய் – ரஜினி ரசிகர்களுக்கு இடையிலான இந்த போட்டிக்கு பின்னணியில் நிகழ்வுகளும் இருந்தன.

ஜெயிலர் திரைப்படம் 605 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், லியோ அதனை தாண்டும் என விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியால் பொங்கி வருகின்றனர்.

லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.148.5 கோடி என கூறப்பட்டது. இது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.

ரஜினியின் 2.0, கபாலி படங்களுக்கு பிறகு முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது. முதலிடத்தையும் பிடித்தது. விமர்சனங்கள் நிறைய வந்ததால் வசூல் குறையும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக லியோ மாறியது. மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. அதேபோல், விடுமுறை தினம் என்பதாலும் கூட்டம் குறையாமல் இருந்தது.

இருப்பினும் முதல் நாள் வசூலுக்கு பின்னர் படக்குழு ரிப்போர்ட் எதனையும் அறிவிக்கவில்லை. ஆனாலும், ஒவ்வொரு நாளாக பல சினிமா ஆர்வலர்களும் ரிப்போர்ட்களை வெளியிட்டு வந்தனர்.

இதில் ஒவ்வொரு முறையும் ஜெயிலர் படத்தின் வசூலோடு ஒப்பிட்டு சோஷியல் மீடியாவில் விவாதங்கள் தீப்பற்றி எரிந்தது. இது ஒருபுறம் இருக்க நேற்றில் இருந்தே லியோ 500 கோடி வசூலை தாண்டி விட்டதாக எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆனது.

மற்றொரு புறம் லியோ ஸ்கேம் என்பதும் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானாதால் உறுதியாக தெரியவரும் என பலரும் கூறிவந்தனர்.

இத்தகைய சூழலில், படம் வெளியாகி 7 நாட்களை கடந்துள்ள நிலையில் 7 நாள் வசூல் நிலவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் லியோ திரைப்படம் 461 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் 7 நாட்களில் அதிகளவு வசூலித்துள்ள திரைப்படம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

”பல ராஜாக்களை பார்த்தாச்சு மா.. ஒரசாம ஓடிடு’ என லியோ பாடல் வரிகளையும் தயாரிப்பு நிறுவனம் தனது அறிவிப்பில் சேர்த்துள்ளது.

இரண்டு நாட்களாக 500 கோடி வசூலை லியோ தாண்டிவிட்டதாக விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்த நிலையில் தற்போது அந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளது.

அதேபோல், ஜெய்லர் படத்தின் வசூலை முறியடிக்கும் இன்னும் 150 கோடி வரை வசூல் செய்ய வேண்டியுள்ளது. விமர்சனங்கள் இருப்பதால் இதற்கு மேலான வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version