அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு மனஅழுத்தம் உண்டாவதுண்டு. இதனைச் சரிசெய்ய ஜப்பானின் டோக்கியோ நகரில் புதிய அணுகுமுறையைக் கையாள்கிறார்கள்.

அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு மனஅழுத்தம் உண்டாவதுண்டு. இதனைச் சரிசெய்ய ஜப்பானின் டோக்கியோ நகரில் புதிய அணுகுமுறையைக் கையாள்கிறார்கள்.

அதாவது ஹேண்ட்சம் வீப்பிங் பாய்ஸ் (Handsome Weeping Boys) என குறிப்பிடப்படும் அழகான ஆண்களை Ikemeso Danshi என்ற சேவையின் மூலம் அழைக்கிறார்கள்.

Ikemeso Danshi என்பதற்கு `அழுகின்ற நல்ல தோற்றமுடைய மனிதர்கள்’ என்று பொருள்.

இதற்கான ஆன்லைன் தளத்தில் தங்களுக்கு வேண்டிய நபர்களைத் தேர்ந்தெடுத்து 7,900 யென் செலுத்துகிறார்கள். அதாவது இந்திய மதிப்பில் 4,400 ரூபாய்.

இந்த ஆண்கள் புலம்பல்களையும் மனவருத்தங்களையும் கேட்பது மட்டுமன்றி கண்ணீரைத் துடைக்கவும், அவர்களுக்காக கண்ணீர் வடிக்கவும் செய்கிறார்கள்.

கண்ணீரைத் துடைக்கும் இந்தச் சேவை டோக்கியோவின் பெரும்பாலான அலுவலகங்களில் பிரபலமடைந்து வருகிறது.

இந்தச் சேவையை நிறுவிய ஹிரோகி டெராய், “உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும்போது அதனை பொறுத்துக் கொள்வதை மட்டும் செய்யாமல், தழுவி அரவணைக்கப்பட வேண்டும் என நினைக்கிறன்.

ஜப்பானியர்கள் வீட்டில் மட்டுமல்ல, பணியிடத்திலும் கண்ணீர் சிந்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நீங்கள் வேலையில் அழும்போது, மிகவும் எதிர்மறையான கருத்து உருவாகலாம். சக ஊழியர்கள் கூட உங்களை அணுகத் தயங்கலாம்.

தொழில்சார் சூழல்களில் பாதிப்பை ஏற்றுக்கொள்வது எமோஷனல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

இது பொது இடங்களில் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் உள்ள சமூக சிக்கல்களையும் எதிர்கொள்ளும்’’ என்று கூறியுள்ளார்.

இது தவிர்த்து பாலியல் இல்லாத அரவணைப்பு சேவைகள் மற்றும் வாடகை நண்பர் சேவைகள் போன்ற வித்தியாசமான சேவைகளும் டோக்கியோவில் அதிகரித்து வருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version