சுமார் 21 இலட்சம் பெறுமதியான திருட்டுப் பொருட்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரகொட வீதி, அங்கொடை மற்றும் வெலிஹிந்த கடுவெல ஆகிய இடங்களில் வசிக்கும் 36, 32 மற்றும் 29 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அதுருகிரி, கடவத்தை, தலங்கம, கடுவெல, பொலிஸ் பிரிவுகளில் 18 இடங்களில் பொருட்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளதுடன், இவர்கள் ‘அய்யா மலோ துந்தெனா’ (அண்ணன் தம்பி மூவர்) என அழைக்கப்படும் சந்தேகநபர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கு நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மூவரையும் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version