விஷ்ணு பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, எவிக்ஷன் கார்டை நீட்டினார் கமல். அதில் ‘சுரேஷ்’ என்கிற பெயர் இருந்தது. “கேட்டு திறக்கும். அந்த வழியா வாங்க. மதில் மேல ஏற வேணாம்” என்று கிண்டலடித்தார் கமல்.

கமல் சிலரை சரியாக விசாரிப்பதில்லை, பாரபட்சம் காட்டி விட்டு விடுகிறார், சிலரிடம் மட்டும் அதிகமாக காட்டம் காட்டுகிறார்’ என்றெல்லாம் புகார்கள் வருகின்றன. அவருடைய விசாரணை முறை பொதுவாக எப்படி அமையும் என்பதற்கான உதாரணமாக இந்த எபிசோடு இருந்தது.

தனது தவற்றை உணர்ந்து ‘ஐயா மன்னிச்சுடுங்க’ என்று சரணாகதி தத்துவத்தை ஒருவர் பின்பற்றினால் அவர்களை கமல் அதிகம் குடாய்வதில்லை.

மாறாகத் தனது தவற்றை விதம் விதமாக நியாயப்படுத்திக் கொண்டேயிருந்தால் போட்டு வெளுத்து விடுகிறார். அதற்காக ‘அறிவிருக்கா?’ என்பது மாதிரியான முரட்டுத்தனத்தைக் கையாளாமல், தவறு செய்தவர் அதை உணரும்படியான வார்த்தைகளை இட்டு பேசுவது நல்ல விஷயம். ஆனால் பெரும்பாலானவர்கள் மசாலா ஆக்ஷன் காட்சிகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

மன்னிப்பு கேட்டுவிடும் வகையில் மாயா, நிக்சன் போன்றவர்கள் எளிதாகத் தப்பித்து விடுகிறார்கள். விஷ்ணு, பூர்ணிமா போன்றவர்கள் ‘விளக்கம் சொல்கிறேன்’ என்று இன்னமும் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.

இதை இந்த எபிசோடிலும் கண்டிருக்க முடியும். ஆனால் ரவீனா என்கிற எக்ஸ்பயரி ஆன விஷபாட்டில், இந்த இரண்டிலும் சிக்காமல் சிரித்துக் கொண்டே சைக்கிள் கேப்பில் ஓட்டும் லாரி இருக்கிறதே?! அடேங்கப்பா!

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

வீடியோவை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 16-12-2023 Vijay Tv Show -Day 76

Bigg Boss 7 Day 75: டான்ஸ் மாரத்தான்; சபதம் எடுத்த தினேஷ்; ஸ்ட்ராட்டஜி குறித்து மாயா சொன்ன சீக்ரெட்- வீடியோ

டான்ஸ் மாரத்தான் கரன்சியில் நிகழ்ந்த பண மோசடி, மணியின் கேப்டன்சி போன்றவைத் தவிர விசாரிக்க இந்த வாரம் பெரிதான விஷயங்கள் இல்லை.

வீடியோவை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 15-12-2023 Vijay Tv Show-Day 75

 

Share.
Leave A Reply

Exit mobile version