ரஸ்யாவின் பெல்கொரோட் நகரின்மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட 21 பேர் கொலலப்பட்டதாகவும் 111 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஸ்யா உக்ரைன் நகரங்களை இலக்குவைத்து பாரிய வான்தாக்குதல்களை மேற்கொண்டதை தொடர்ந்ர்ந்து உக்ரைன் இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

பெல்கொரொட் நகரின் மீது பாரிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது என டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்செயலிற்காக தண்டனை வழங்காமலிருக்கப்போவதில்லை என ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைன்அரசாங்கம்முன்னரங்குகளில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து கவனத்தை திசைதிருப்ப முயல்கின்றது எங்களையும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க தூண்டுகின்றது என ரஸ்யா தெரிவித்துள்ளது.

ரஸ்யாவுடனான எல்லையில்உள்ள நகரங்களை இலக்குவைத்து உக்ரைன் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது எனினும்இந்த தாக்குதலிலேயே பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version