இன்று இலங்கையில் ஏறத்தாழ முழுமையாக சிங்களவர்கள் வாழும், தென்மாகாண காலியை கருத்தில் கொண்டால், அங்கே ரொசெட்டாக் கல் அல்லது கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு அல்லது மூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு / கற்பலகை [Rosetta Stone] ஒன்றை எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H. Thomlin] 1911இல் கண்டு எடுத்து உள்ளார்.
இதை இன்று காலி மும்மொழி கல்வெட்டு (Galle Trilingual Inscription) என்று அழைப்பதுடன், இலங்கையின் கொழும்பு தேசிய நூதனசாலையில் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியுமான ‘செங் கே’ [Chinese traveler Zheng He ,dated 15 February 1409] இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese, Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட இந்த கற்றூண் [stone pillar] கல்வெட்டு நடப்பட்டது ஆகும்.
மேலும் இது அவரும் [செங் கே] மற்றவர்களும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலைக்கு (Adam’s Peak; சிங்களம்: சிறிபாத] வழங்கிய காணிக்கை பற்றி கூறுகிறது.
புத்தருக்கு கொடுத்த காணிக்கை பற்றி சீன மொழியிலும், அல்லாஹ்விற்கு வழங்கியதை பாரசீக மொழியிலும், தென்னாவர நாயனார் [Tenavarai Nayanar] என அழைக்கப்படும் விஷ்ணுவிற்கு வழங்கியதை தமிழிலும் எழுதப் பட்டுள்ளது. [The Chinese inscription mentions offerings to Buddha, the Persian in Arabic script to Allah and the Tamil inscription mentions offering to Tenavarai Nayanar (Hindu god, Vishnu).].
தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம் / Tenavaram temple) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று இது ஆகும்.
கல்லாடநாகன் (கிமு 50 – 44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 – 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 – 269) (8) அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின்னோட்டத்துடன் இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும்.
அது மட்டும் அல்ல, தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகனின் தந்தை பெயர் வீர தீசன் ஆகும் (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85). இவர்கள் யாரும் தங்களை ஹெல, சிகல அல்லது சிங்கள என அழைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
நாகர்கள் அதிகமாக மங்கோலியா இன மூலத்தை கொண்டவர்கள் [Mongolian origin] என்று C.ராஜநாயகம் [C.Rasanayagam] கூறுவதுடன், வருணோ மஹதி [Waruno Mahdi] என்பவர், நாகர்கள் ஒரு கடல் வாழ் மக்கள் என்கிறார் [a maritime people]. மேலும் தென் இந்திய மக்களில், கேரளத்தில் வாழும் திராவிட நாயர் [Nāyars] சமுதாயத்தை உதாரணமாக எடுக்கிறார்கள், பண்டைய கேரளா மக்கள் தமிழ் சேரர் என்பது குறிப்பிடத் தக்கது.
நாகர்கள் பண்டைய வட இலங்கையில் வசித்தவர்கள் என்றும், பண்டைய தமிழர் என்றும் இரண்டாம் நூற்றாண்டு டோலமியின் வரைபடத்தை வைத்து வாதாடுகிறார் [Manogaran (2000) believed the Nāgas of the MV to be ancient Tamils, drawing his conclusions on Ptolemy’s 2nd century A.C. map of Taprobane which he supposes indicates Nāgadīpa in the northern part of the island, the areal extent of which corresponds to the area settled by present-day Tamils]
கி மு மூன்றாம் நூற்றாண்டு வரை நாகர்கள் தனித்துவமான இனமாக ஆரம்பகால இலங்கை வரலாற்று குறிப்பேடுகளிலும் [chronicle] மற்றும் ஆரம்பகால தமிழ் இலக்கிய படைப்புகளிலும் காணப்படுவதுடன், கி மு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில், நாகர்கள் தமிழ் மொழியுடனும், தமிழ் இனத்துடனும் ஒன்றிணைய தொடங்கி, தம் தனிப்பட்ட அடையாளத்தை இழந்தார்கள் [Holt, John (2011), The Sri Lanka Reader: History, Culture, Politics, Duke University Press] என்று கருதப் படுகிறது.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/- அத்தியடி, யாழ்ப்பாணம்]