கின்னஸ் உலக சாதனை தினம் வியாழக்கிழமை (21.11) உலகளவில் கடைபிடிக்கப்படுகிறது. கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடும் விதமாக அரியதொரு காட்சியை உலக மக்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்கள், ருமேசா கெல்கியும் ஜோதி அம்கேயும்.
ருமேசா கெல்கி (Rumeysa Gelgi) உலகின் மிகவும் உயரமான பெண். ஜோதி அம்கே (Jyoti Amge) உலகில் மிக குள்ளமான பெண்.
இந்தியா நாட்டைச் சேர்ந்த ஜோதி அம்கேயும் துருக்கி நாட்டைச் சேர்ந்த ருமேசா கெல்கியும் லண்டனில் செவ்வாய்க்கிழமை (19) முதல் முதலாக சந்தித்துக்கொண்டனர்.
இந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி பார்வையாளர்களை கவர்ந்தது.
ருமேசா கெல்கி 215.16 செ.மீ (7 அடி 7 அங்குலம்)உயரமுடைய உலகில் மிக உயர்ந்த பெண்ணாகவும், ஜோதி அம்கே 62.8 செ.மீ (2 அடி 7 அங்குலம்) உயரமுடைய உலகில் மிக குள்ளமான பெண்ணாகவும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.