கனடாவின் ஏர் கனடா (Air Canada) விமானம் ஒன்று தீ பிடித்த நிலையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ஏர் கனடா விமானத்தின் கியர் செயலிழந்ததால் விமானத்தின் இறக்கை ஓடுதளத்தில் உரசி திடீரென தீப்பிடித்துள்ளது.
இந்நிலையில், ஹாலிஃபாக்ஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.