“மகாராஷ்டிராவில் பிரசவத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்ற மனைவியை கணவன் உயிருடன் தீவைத்து எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் கங்காகேட் நாகாவை சேர்ந்தவர் குண்ட்லிக் உத்தம் காலே[32 வயது].
இவரது மனைவி மைனா [Maina] குண்ட்லிக். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் இல்லாததால் மைனாவை காலே தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான மைனாவுக்கு சமீபத்தில் பிரசவம் நடந்துள்ளது. 3 வது முறையாகவும் பெண் குழந்தையே பிறந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கணவன் குண்ட்லிக் உத்தம் காலே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடந்த வியாழக்கிழமை இரவு 8:00 மணியளவில் மைனா மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துள்ளார்.
உயிருடன் எரிந்தபடி அவர் அலறியடித்துக்கொண்டு வீட்டின் வெளியே ஓடினார். அக்கம்பக்கத்தினர் தீயை அனைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் [வெள்ளிக்கிழமை] அவர் உயிரிழந்தார். மைனாவின் சகோதரி அளித்த புகாரின் பேரில் போலீசார் கணவன் குண்ட்லிக் உத்தம் காலேவை கைது செய்துள்ளனர்.
அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 103 (கொலை வழக்கு) பதிவு செய்யப்பட்டுள்ளது. “,
Maharashtra: In Parbhani, a man set his wife on fire after the birth of their third daughter. The wife later succumbed to her injuries at the hospital. CCTV footage shows her fleeing the burning house. The accused, Kundlik Kale, with a history of domestic violence, is under… pic.twitter.com/5pl0b6x2vf
— IANS (@ians_india) December 29, 2024