“இமாச்சல பிரதேசத்தில் தொடங்கியுள்ள கடுமையான பனிப்பொழிவு போக்குவரத்துகளைப் பாதித்து வருகிறது. ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்கள் வழுக்கும் மேற்பரப்பில் சறுக்குவதால் கட்டுப்பாட்டை இழந்து ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர்.

இதுபோன்ற ஒரு சம்பவத்தில், மணாலி அருகே சோலாங் பள்ளத்தாக்கில் பனி மூடிய சாலையில் ஒரு சிறிய டிரக் கட்டுப்பாடில்லாமல் சறுக்கி பள்ளத்தாக்கில் கவிழும் வீடியோ வெளியாகி உள்ளது.

இரவில் பனிக்கட்டியான சாலையில் டிரக் சரியத் தொடங்குகிறது. எனவே ஓட்டுநர் வாகனத்திலிருந்து வெளியே குதித்தார். மேலும் கீழே சரியும் தனது டிரக்கை கையால் நிறுத்த முயற்சித்தார். ஆனால் தரை வழுக்களாக இருந்ததால் அவர் அதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது.

கடைசியில் டிரக் சறுக்கியவாரே சாலையை விட்டு விலகி, கீழே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது.

இமாச்சலில் கடந்த டிசம்பர் 8 இல் முதல் பனிப்பொழிவு தொடங்கிய நிலையில் இந்த வாரம் இரண்டாம் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. மணாலியில் பனிப்பொழிவு காரணமாக சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதைக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1,000 வாகனங்கள் மணிக்கணக்கில் சிக்கித் தவித்தன. மேலும் குலு [kullu] பகுதியில் ரிசார்ட்டில் சிக்கிய சுமார் 5,000 சுற்றுலா பயணிகளை போலீசார் நேற்று மீட்டுள்ளனர்.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீரிலும் நேற்றைய தினம் ஆண்டின் முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. “,

Share.
Leave A Reply

Exit mobile version