சமஷ்டி என்ற கருத்தை துணிச்­ச­லோடு முன்­வைத்­தவர் வேறு யாரு­மல்ல, இலங்­கையின் முன்னாள் பிர­தமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா.

அதே பண்­டா­ர­நா­யக்கா 1956 ஆண்டு தனிச்­சிங்­களச் சட்­டதை கொண்டு வந்­தது மட்­டு­மல்ல, 1957 ஆம் ஆண்டு சிங்­கள ஸ்ரீ வாக­னங்­களை யாழ்ப்­பா­ணத்­துக்கு அனுப்பி குழப்­பத்தை உண்­டாக்­கி­யதும், 1958 ஆம் ஆண்டு தமி­ழர்­களுக்கெதி­ரான முத­லா­வது இனக்­க­ல­வ­ரத்தை தூண்­டி­யதும் இதன் எதிர் விளை­வாக தமி­ழர்கள் சமஷ்டி ஆட்சி கோரிக்­கையை முன்­வைத்து போரா­ட­வேண்­டிய சூழ்­நி­லைக்கு தள்­ளப்­பட்­டதும் அதன் இன்­னொரு விஸ்­வ­ரூ­ப­மாக ஆயு­தப்­போ­ராட்டம். வெடித்­ததும் தமி­ழர்கள் அர­சியல் பய­ணத்தில் முக்­கிய சம்­ப­வங்­க­ளாகும்.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவை (பவள விழா) கடந்த 18.12.2024 திகதி யாழ்ப்­பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினை­வி­டத்தில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தற்­போ­தைய தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து அனுஷ்­டித்­துள்­ளனர்.

எனவே தான் பவள விழாக்­காணும் தமி­ழ­ர­சுக்­கட்சி எத்­த­கைய சூழ் நிலையில் ஸ்தாபிக்­கப்­பட்­டது? அது காவி­வந்த சமஷ்டிக் கொள்­கையின் தாற்­ப­ரியம் என்ன என்­பதை புதிய தலை­மு­றை­யினர் அறிந்து கொள்ள அந்த வர­லாறு இங்கு சமர்­ப்பிக்­கப்­ப­டு­கி­றது.

பிரித்­தா­னி­யா­வி­லுள்ள புகழ் பெற்ற பல்­க­லைக்­க­ழ­க­மொன்றில் சட்­டத்­து­றையில் பட்டம் பெற்று தாயகம் திரும்­பிய பண்­டா­ர­நா­யக்கா, நேர­டி­யா­கவே இலங்கை அர­சி­யலில் நுழைந்தார்.

1926 ஆம் ஆண்டு யாழ். இளைஞர் காங்­கி­ரஸின் அழைப்­பின்­பேரில் அங்கு சென்று உரை­யாற்­றி­ய­போது ‘பல இனங்கள் வாழும் இலங்­கைக்கு சமஷ்டி ஆட்சி முறையே சிறந்­தது’ என்று விளக்கிக் கூறி­ய­துடன் ஐக்­கிய அமெ­ரிக்கா, சுவிட்­ஸர்­லாந்து, கனடா போன்ற நாடு­களில் சிறப்­பான ஜன­நா­யக ஆட்சி நடை­பெ­று­கி­ற­தென்றால் அதற்குக் காரணம் அங்கு காணப்­படும் சமஷ்டி வடி­வி­லான ஆட்சி முறையே என்று கூறி­யி­ருந்தார். இதை ஏற்றுக் கொண்ட யாழ். இளை­ஞர்கள் பண்­டாவின் இக்­க­ருத்தை கை தட்டி வர­வேற்­றனர்.

அப்­போது தந்தை செல்­வ­நா­யகம் அர­சி­ய­லுக்கு வர­வு­மில்லை. தமி­ழ­ர­சுக்­கட்­சியை ஸ்தாபிக்­க­வு­மில்லை. இச்­சம்­பவம் நடந்து சுமார் 23 வரு­டங்­க­ளுக்­குப்­பின்தான் தந்தை செல்வா தலை­மை­யி­லான இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கு கால்கோள் இடப்­பட்­டது.

பண்­டா­ர­நா­யக்கா 1926 ஆம் ஆண்டு யாழில் நிகழ்த்­திய சமஷ்டி பற்­றிய உரை, யாழ்ப்­பாண புத்­தி­ஜீ­விகள் மற்றும் கல்வி மான்கள் மட்­டத்தில் ஒரு கன­வா­கவும் அர­சியல் ஞான­மா­கவும் 100 வரு­டங்­க­ளுக்கு முன் கரு­தப்­பட்­டது. அப்­பொ­ழு­தெல்லாம் யாழ்ப்­பாண இளை­ஞர்கள் மத்­தியில் அர­சியல் தீவிரம், சுய­நிர்­ணய உரிமை முகிழ்ந்திருக்­க­வில்லை.

யாழ். ராஜ்­ஜி­யத்தின் வீழ்ச்­சிக்­குப்பின் (குறிப்­பாக 1620 இல் யாழ்ப்­பாணம் போர்த்­துக்­கே­யரின் நேர்­முக ஆட்­சிக்குள் கொண்­டு­ வ­ரப்­பட்­டது) யாழ். குடா நாட்டின் பாரம்­ப­ரி­யங்­கள், சமய அனுஷ்ட்­டா­னங்கள், கந்­தப்­பு­ராணக் கலா­சா­ரங்கள் மீது மக்கள் கொண்­டி­ருந்த நாட்­டத்தின் கார­ண­மாக யாழ். குடா­நாடு ஓர் அடக்­கப்­பட்ட அர­சியல் உணர்­வு­களை கொண்­ட­தா­கவே காணப்­பட்­டது.

இருந்­த­போ­திலும் 1921 யாழில் நிறு­வப்­பட்ட தமிழர் மகாஜன­சபை, ஒட்­டு­மொத்­த­மான தமி­ழர்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை அடை­வ­தற்­காக எல்லா மட்­டங்­க­ளி­லு­முள்ள தமி­ழரை ஒரே குடையின் கீழ் கொண்­டு ­வந்­தது. (கலா­நிதி முருகர் குண­சிங்கம், இலங்­கைத் தமிழர்)

எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா (1899—1959) பிறப்பால் ஒரு அங்­கி­லிக்கன் மதத்தைச் சேர்ந்­தவர். இவர் கண்டி ராஜ்­ஜி­யத்தில் ஆலயம் ஒன்றில் பூச­க­ராக கட­மை­யாற்­றிய நீலப் பெருமாள் பண்­டாரம் என்­ப­வ­ரிடம் இருந்து வளர்ந்­த­வ­ரென்றும் கூறப்­ப­டு­கி­றது.

இவர் தந்தை சொலமன் டயஸ் பண்­டார நாயக்க. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா ஆங்­கி­லேயர் ஆட்சிக்காலத்தில் பிரித்­தா­னி­யா­வி­லுள்ள ஒக்ஸ்பர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்று சட்­டத்­த­ர­ணி­யாக நாடு திரும்­பினார்.

அர­சி­யலில் ஆர்வம் கொள்ளக் காரணம் இவ­ரது பல்­க­லைக்­க­ழக ஆசி­ரி­யர்­க­ளாவர். 1926 கொழும்பு மாந­க­ர­சபை உறுப்­பி­ன­ரா­கவும் 1931 முதல் 1947 வரை இலங்கை அரச கழ­கத்­திலும் பல்­வேறு பத­வி­களை வகித்­து­ வந்தார்.

அவர் கிறிஸ்­தவ மதத்தை துறந்து தன்­னை­யொரு பௌத்­த­னாக அடை­யாளம் காட்­டி­ய­மைக்கு அர­சியல் பிர­வே­சமே கார­ண­மாகும். ஆரம்ப காலத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் (1946 முதல் 1951) இணைந்­தி­ருந்த இவர் அதி­லி­ருந்து பிரிந்து 1951 ஆம் ஆண்டு(2.9.1951) ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி ­என்ற புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பித்து அதன் தலை­வ­ரானார்.

யாழ்ப்­பா­ணத்தில் பண்­டா­ர­நா­யக்க கூறிய சமஷ்டி பற்­றிய கருத்­துக்கள் தந்தை செல்­வாவின் அர­சியல் சிந்­த­னைக்கு தீனி போட்ட நிலையில் பின்­னாளில் இது­பற்றி ஆழ­மான நம்­பிக்கை கொண்­ட­வ­ராக தந்தை செல்­வ­நா­யகம் விளங்­கி­யதன் கார­ண­மா­கவே சமஷ்டிக் கட்­சி­யாக இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியை உரு­வாக்­கினார்.

அதே தலைவர் பின்­னாளில் தமி­ழ­ரசுக் கட்­சியின் சமஷ்டிக் கோரிக்கை தோல்­வி­கண்டு விட்­ட­தாக ஒப்புக் கொண்ட சம்­பவம், 1972 ஆம் ஆண்டு ஜன­வரி 12 ஆம் திகதி காங்­கே­சன்­து­றையில் நடந்த மாபெ­ருங்­கூட்­டத்தில் இடம் பெற்­றது.

அன்­றைய தினம் (1972.1.12) ஆறு தமிழ்க்­கட்­சிகள் ஒன்­றி­ணைந்து அர­சுக்கு எதி­ராக மாபெரும் ஆர்ப்­பாட்ட ஊர்­வல மொன்றை நடத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டி­ருந்­தன. இதற்கு தலைமை தாங்­கிய தந்தை செல்வா, ‘நாம் முன்­னெ­டுத்துச் செல்லும் சமஷ்­டிக் கோ­ரிக்கை தோல்வி கண்டு விட்­டது.

சமஷ்டிக் கோரிக்கை வெற்றி பெறு­வ­தற்கு சிங்­கள மக்­களின் ஒத்­து­ழைப்பு தேவை. 1960 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்­டு­வரை சிங்­களக் கட்­சி­களின் ஆத­ரவை பெறு­வ­தற்­காக நாம் எடுத்த அத்­தனை முயற்­சி­களும் வெற்றி பெற­வில்லை’ என பகி­ரங்­க­மாக அக்­கூட்­டத்தில் ஒத்துக் கொண்டார்.

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வாக சமஷ்டி முறை­யி­லான தீர்வே உரித்­து­டை­யது. தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யக் கூடி­யதும் அதுவே, என்­பதை தந்தை செல்­வ­நா­யகம் தொடக்கம் மூத்த தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் தமிழ்த்தலைவர்கள் வரை கடந்த 75 வருட காலம்­வரை வலி­யு­றுத்தி வந்­த­போதும், அது இன்னும் எட்­டாக்­க­னி­யா­கவே இருந்து வந்­துள்­ளது என்­பதை சகல தரப்­பி­னரும் அறிவர்.

அண்­மையில் (7.12.2024) இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த சுவிட்­ஸர்­லாந்து இரா­ஜாங்க துணைச் செய­லாளர் டிம் எண்டர்லின்னை வடக்கு, மக்கள் பிரதி நிதிகள் சந்­தித்து உரை­யா­டி­ய­போது புதிய அர­சியல் அமைப்­பி­னூ­டாக சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான நிரந்­த­ர­மான தீர்வு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு என்று தெரி­வித்­தி­ருந்­தனர்.

இதே கோரிக்­கையை கடந்த 15 ஆம் திக­தி­ ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க இந்­திய விஜ­யத்தை மேற்­கொண்­டதை முன்­னிட்டு பிர­தமர் மோடிக்கு கடிதம் எழு­திய தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், சமஷ்­டியை கோரு­வ­தற்கு இந்­தியா முழு ஆத­ரவு வழங்க வேண்­டு­மென்று தனது கடி­தத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார். இதி­லி­ருந்து ஒன்­றைப்­பு­ரிந்து கொள்ள முடி­கி­றது, தமிழ்த்­த­லை­மைகள் சமஷ்டிக் கோரிக்­கையை இன்னும் கைவி­ட­வில்லை என்­பதே அது.

தென்­னி­லங்கை அர­சியல் தலை­மை­களை பொறுத்­த­வரை சமஷ்டி என்­பது நாட்டைப் பிரித்­து­விடும் சாத்தான். சமஷ்­டித்தீர்வை தமி­ழர்­க­ளுக்கு வழங்கி விட்டால் இலங்­கைத்­தீவு இரு நாடா­கி­விடும், தமிழ் ராஜ்­ஜியம் ஒன்று உரு­வா­கு­வ­தற்கு வழி­வ­குத்­து­விடும், இது சிங்­கள மக்­களின் பௌத்த மேலா­திக்­கத்தை அழித்­து­விடும் என்ற அச்சம் கொண்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கி­றார்கள்.

இது பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் அவர்­களால் வெளிக்­காட்­டப்­பட்டு வந்­துள்­ளது. இதன் கார­ண­மா­கவே சிங்­கள மக்கள் சமஷ்­டி­ மீது அடங்­காச்­சினம் கொண்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கி­றார்கள் என்­பது தெளி­வாக தெரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கி­றது.

சுதந்­தி­ரத்­துக்­குப்பின் இலங்­கையை ஆட்சி செய்த சிங்­களத் தலை­மை­க­ளான டி.எஸ். சேன­நா­யக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க, திரு­மதி ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க, டட்லி சேன­நா­யக்க, சேர். ஜோன் கொத்­த­லா­வல, டபிள்யூ. தஹ­நாயக்க, ஜே.ஆர் ஜய­வர்­தன, ஆர். பிரே­ம­தாச, சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்கா, மஹிந்த ராஜ­பக் ஷ , மைத்­தி­ரி­பால சிறி­சேன, கோட்­டா­பய ராஜ­பக் ஷ, ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவர்கள் யாருமே சமஷ்டி முறை­யி­லான அர­சியல் தீர்வை அங்கீகரித்­த­வர்­க­ளா­கவோ ஏற்றுக் கொண்­ட­வர்­க­ளா­கவோ இருக்­க­வில்லை.

சமஷ்டி ஆட்சி முறை இலங்­கைத்­தீவை பிரி­வி­னைக்கு கொண்டு சென்­று­வி­டு­மென்ற கடு­மை­யான இன­வாத பிர­சா­ரத்தை செய்த தலை­வர்­களில் டி.எஸ்.சேன­நா­யக்கா, ஜே.ஆர். ஜயவர்தன முக்­கிய தலை­வர்­க­ளாவர்.

தந்தை செல்வா தலை­மையில் 1949 ஆம் ஆண்­டுக்­குப்பின் சமஷ்டி பற்­றிய பிர­சா­ரங்கள் வளர்ச்சி அடைந்து தமிழ் மக்கள் மத்­தியில் சமஷ்டி பற்­றிய ஆழ­மான நம்­பிக்­கைகள் வளர்ந்து வந்த நிலையில் தந்தை செல்வாவின் தலை­மை­யையும், தமிழ­ர­சுக்­கட்­சியின் வளர்ச்­சி­யையும் விரும்­பாத, நேர­டி­யா­கவே எதிர்த்துக் கொண்­டி­ருந்த தமிழ்க் காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் ஜி.ஜி. பொன்­னம்­பலம் கொக்­குவில் இந்­துக்­கல்­லூ­ரியில் விவாத மேடை ஒன்றை அமைத்து சமஷ்டி பற்றி விவா­திப்­ப­தற்கு தந்­தை செல்வாவுக்கு பகி­ரங்க அழைப்­பொன்றை விடுத்­தி­ருந்தார்.

30.08.1950 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருந்த இந்த விவா­தத்­துக்­கான அழைப்பை தந்தை செல்வா ஏற்றுக் கொள்­ள­வில்லை. 1951 ஆம் ஆண்டு ஒக்­டோ­பரில் ஜி.ஜி. பொன்­னம்­ப­லத்தின் அழைப்பை ஏற்று யாழ்ப்­பாணம் வந்த பிர­தமர் டி.எஸ். சேன­நா­யக்க, தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சமஷ்டிக் கோரிக்­கையை பிரி­வி­னை­வாத கோரிக்கை என கடு­மை­யாக விமர்­சித்­தது மட்­டு­மல்ல, சிங்­களப் பிர­தே­சங்­க­ளுக்கு சென்று தொடர்ச்­சி­யாக அதற்கு எதி­ரான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டார்.

சமஷ்டிக் கோரிக்­கையை பிரி­வி­னை­வாத கோரிக்­கை­யாக சிங்­கள மக்­க­ளுக்கு முத­லா­வ­தாக போதித்த தலைவர் டி.எஸ். சேன­நா­யக்க. இவ­ருடன் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் முக்­கிய பிர­மு­க­ராக விளங்­கிய ஜய­வர்­த­னவும் இப்­பி­ர­சா­ரத்தை தொடர்ந்து முன்­னெ­டுத்தார். இந்­தப்­பி­ர சார நட­வ­டிக்­கைகள் சிங்­கள பேரி­ன­வா­திகள் மத்­தியில் தவ­றான பிர­ம்மையை உரு­வாக்­கி­யது.

தென்­னி­லங்கை தலை­மைகள் எவ்­வாறு கரு­தி­ய­போதும், தந்தை செல்­வ­நா­யகம் சமஷ்டி முறை­யி­லான தீர்­வைத்­த­விர தமிழர்­க­ளுக்கு ஏற்­பு­டையதான அர­சியல் தீர்வு எதுவும் இருக்க முடியாது என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவராக விளங்கினார்.

அதுபோலவே அவர் தலை மையிலான இலங்கை தமிழரசுக்கட்சியும் கடந்த 75 வருடங்களுக்கு மேலாக சமஷ்டி முறையிலான தீர்வைப் பெறுவதற்காக ஒப்பந்தங்கள், உண்ணாவிரதப் போராட்ட ங்கள், சத்தியாக்கிரகப் போராட்டங்கள் என பல போராட்டங்களை நடத்தியபோதும், எதையுமே சாதிக்க முடியவில்லை என்ற அவ நம்பிக்கை நிலையே தமிழ் மக்களின் அதிருப்திக்கு காரணமாக இருந்துவந்துள்ளது.

1987 ஆம் ஆண்டு இந்திய அரசின் அனுசரணையோடு இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைவாக 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போதும் சமஷ்டி ஆட்சி முறைக்கு முன்னுரை எழுதப்பட்டிருப்பதாக இந்திய தரப்பால் கூறப்பட்டது.

ஆனால், ஆயுதக்குழுக்களாக இருக்கலாம், அன்றி மிதவாத போக்குடைய கட்சிகளாக இருக்கலாம், 13 ஆவது திருத்தத்தை வட, கிழக்கு மக்களுக்கான பொருத்தமான அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே யுத்த மௌனிப்புக்குப் பின்னும் தமிழ்த் தேசியக்கட்சிகள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன.

திருமலை நவம்

(தொடரும்)

Share.
Leave A Reply

Exit mobile version