சீனாவின் Three Gorges Dam அணையானது சுமார் 40,000 தொழிலாளர்களால் கட்டப்பட்டது. இந்த மெகா திட்டத்தின் பணிகள் 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய இந்த அணையை 2011ஆம் ஆண்டு, 31 மில்லியன் டாலர்கள் செலவில் சீனா கட்டியது.
2005ஆம் ஆண்டில், அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான நாசா, Three Gorges Dam-ன் மிகப்பெரிய நீரின் அழுத்தத்தால் உலகம் முன்பை விட சற்று தாழ்ந்துவிட்டது என்று கூறி உள்ளது. அதுமட்டுமின்றி, அணையில் ஏற்பட்ட மிகப்பெரிய நீர் அழுத்தம் பூமியின் இயக்கத்தின் வேகத்தை மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், நாளின் நீளமும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அணை சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சர்வதேச அரசியலிலும் உலகப் பொருளாதாரத்திலும் செல்வாக்கை செலுத்தவும் வழிநடத்தவும் சீனா செயல்படுத்திய பல பெரிய திட்டங்களில் இந்த அணையின் கட்டுமானமும் ஒன்றாகும். Three Gorges Dam பூமியின் நீரோட்டம் மற்றும் வடிவத்தையே மாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1931ல், சீனாவில் மற்றொரு பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் விளைவுகள் இன்னும் மோசமாக இருந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் 3 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். இதையடுத்து வெள்ளத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் வகையில், சீன அரசு இந்த விலையுயர்ந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.
இந்த அணையின் கட்டுமானத்தில் 2 கோடியே 80 லட்சம் யூரிக் மீட்டர் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாட்டில் இந்தளவு கான்கிரீட்டை ஒரு முறை ஊற்றினாலே, சுவிட்சர்லாந்து முழுவதும் இரண்டு அடி கான்கிரீட்டின் கீழ் மூழ்கிவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அணையில் அதிகளவு தண்ணீர் தேக்கி வைத்திருப்பதால் பூமி மெதுவாக சுழல ஆரம்பித்துள்ளது. 0.06 மைக்ரோ விநாடிகள் வேகம் குறைந்ததால், உலகளவில் நாளின் நீளம் 0.06 மைக்ரோ விநாடிகள் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, சீனா இயற்கை பேரழிவு வெள்ளத்தை சமாளிக்க முடியும். அதே நேரத்தில், இந்த அணையின் மூலம் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வறட்சியை சமாளிக்க அவசியம் ஏற்படும் போது, சீனா இந்த அணையின் மூன்று நீர்த்தேக்கங்களை திறந்து விடுகிறது.