அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நாடு கடத்தும் உத்தரவை தொடர்ந்து கைகளில் விலங்கிடப்பட்டவர்கள் அமெரிக்காவின் இராணுவ விமானங்களில் ஏற்றப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் டெலிகிராவ் தெரிவித்துள்ளதாவது

பெருமளவில் குடியேற்றவாசிகளை வெளியேற்றும் டிரம்பின் நடவடிக்கை முழுமூச்சில் இடம்பெறுகின்றது, குடியேற்றவாசிகள் தங்கள் நாடுகளிற்கு அனுப்பப்படுவதற்காக கைவிலங்கிடப்பட்ட நிலையில் விமானங்களில் ஏற்றப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

நாடுகடத்தும் விமானங்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளன என டிரம்பின் ஊடக அதிகாரி கரோலின் லியவிட் தெரிவித்துள்ளார். கணுக்கால் மற்றும் மணிக்கட்டுகளில் விலங்கிடப்பட்ட நபர்கள் விமானங்களை நோக்கி செல்வதை காண்பிக்கும் படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் இது என குறிப்பிட்டுள்ளார்.

நாடுகடத்தப்பட்டவர்களில் பயங்கரவாத சந்தேநபர்கள் என கருதப்படும் நால்வரும்,வெனிசுவேலாவை சேர்ந்த குற்றக்கும்பல் ஒன்றை சேர்ந்தவர்களும் சிறுவர்களிற்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பலரும் உள்ளதாக டிரம்பின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவின் டிரென் டி அராகுவா வன்முறைக்கும்பல் குறித்து அமெரி;க்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கடும் வாதபிரதிவாதங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கொலராடோவில் உள்ள நகரமொன்றை போர்க்களமாக மாற்றியுள்ளனர் என டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

சுமார் 169 குடியேற்றவாசிகளுடன் இரண்டு அமெரிக்க விமானங்கள்புறப்பட்டுள்ளன,அமெரிக்க வரலாற்றில் சமீப காலத்தில் நாடு கடத்தப்படும் குடியேற்றவாசிகளுடன் அமெரிக்க விமானங்கள் புறப்பட்டமை இதுவே முதல்தடவை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version